வீரப்பனுடன் எனக்குத் தொடர்பா? மறுக்கிறார் ராமதாஸ்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என பாட்டாளிமக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
ராமதாசுக்கும் வீரப்பனுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ராஜிவ் காங்கிரஸ்தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி குற்றம் சாட்டியிருந்தார். இதனை ராமதாஸ்திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது குறித்து ஈரோட்டில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறுகையில்,
ராஜ்குமார் கடத்திலில் இரு மாநில முதல்வர்களும் எடுத்துள்ள முடிவு சரியானது.இதற்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
இரு மாநில முதல்வர்களின் வாக்குறுதியை நம்பியும், கர்நாடகத்தில் வாழும்தமிழர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் ராஜ்குமாரை எந்த நிபந்தனையும்இல்லாமல் வீரப்பன் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வீரப்பனுடைய முந்தைய கோரிக்கைகளைவிட இப்போது தெரிவித்துள்ளகோரிக்கைகள் வித்தியாசமாக உள்ளன. பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளைவைத்துப் பார்க்கும்போது தீவிரவாத இயக்கங்களுடன் வீரப்பனுரக்கு தொடர்புஇருப்பதாகத் தெரிகிறது.
வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது. காவிரிப் பிரச்சனையால் 2 லட்சம்தமிழர்கள் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு ஓடி வந்தனர். அதைப்பற்றி பேசஇப்போது சரியான நேரமல்ல.
எங்களுக்கும் வீரப்பனுக்கும் தொடர்பு இருப்பதாக வாழப்பாடி ராமமூர்த்திகூறியுள்ளார். வீரப்பனுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ராமமூர்த்தியின்குற்றச்சாட்டு ஆதாரம் இல்லாததது என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications