டிராக்டரால் ஜெயில் சுவரை உடைத்துத் தப்பிய கைதி
Subscribe to Oneindia Tamil
ஹன்ட்ஸ்வில்லே (அமெரிக்கா):
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில், 45 வருட தண்டனை பெற்ற ஜெயில் கைதி, தனக்கு பழுது பார்க்கக் கொடுத்த டிராக்டரின் உதவியால் ஜெயில் சுவரைஉடைத்துக் கொண்டு தப்பித்தார்.
அவர் தப்பித்துச் செல்வதைக் கண்ட ஜெயிலில் உள்ள காவலர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அதையும் மீறி அந்தக் கைதி தப்பித்தார். டெரி ரோடெஸ் என்ற31 வயது கைதி 1997-ம் ஆண்டு கற்பழிப்பு மற்றும் திருட்டுச் செயல்களில் ஈடுபட்டது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, 45 வருட தண்டனை பெற்றுடெக்சாஸ் நகர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு முன்பு இவர் மெக்கானிக்காக இருந்தார்.
ரோடஸின் மனைவி விமானநிலையத்தில் காத்திருந்ததாகவும், டிராக்டருடன் ரோடஸ் அங்கு சென்று மனைவியை அழைத்துக் கொண்டு தப்பியதாகவும்போலீஸார் கருதுகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications