சென்னையில் போலி டெலிபோன் நிறுவனங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் 3 இடங்களில் போலி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.இதனால் அரசு நிறுவனமான வி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் போலித் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மூலம் கோடிக்கணக்கில் மோசடி நடந்திருப்பதும்அம்பலமாகியுள்ளது.

அரசின் அதிகாரபூர்வ நிறுவனமான வி.எஸ்.என்.எல் நிறுவனம் தொலைத்தொடர்பு வெளிநாட்டு தொலைபேசிஇணைப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் சில போலி நிறுவனங்களும், தொலைத் தொடர்பு மையங்களை உருவாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் போலி நிறுவனங்கள் நாடு முழுவதும் ரகசிய மையங்களை வைத்து செயல்படுகிறது.

இந்த போலி நிறுவனங்களால் வி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தப்போலி நிறுவனத்தின் முக்கிய மையம் அமெரிக்காவில் செயல்பட்டு வருகிறது.

இதன் ரகசிய தொலைத்தொடர்பு நெட்வொர்க் மூலம் வெளிநாட்டு தொலைபேசிக் கால்கள் சாதாரண உள்ளூர்கால்களாக மாறிவிடும். இங்குள்ள இந்தப் போலி மையங்கள் இங்கிருந்து கால் அனுப்பும் மையங்களாக மட்டுமேசெயல்பட்டு வருகிறது.

செயற்கைக்கோள் மற்றும் ஐ.எஸ்.டி.என் மூலம் இந்த போலி நிறுவனத்தினர் வெளிநாட்டு டெலிபோன்இணைப்புக்களை சென்னை உஸ்மான் ரோட்டிலுள்ள தனது நிலையத்துடன் இணைத்து விடுவார்கள். பிறகு அதைமற்ற உள்ளூர் எண்ணுடன் இணைப்பார்கள்.

இதனால் அமெரிக்காவிலிருந்து இங்கு பேசும்போது சாதாரணமாக உள்ளூர் கட்டணமே வரும். இதே போல்இன்டர்நெட் புரோட்டோகால் மூலமும் திருட்டுத்தனமாக தகவல் பரிமாற்றம் நடந்துள்ளன.

தொலைத்தொடர்புத் துறையில் நடந்துள்ள இந்த மோசடி குறித்து சி.பி.ஐ போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+