வீரப்பனை தூண்டுகிறதா தமிழ் தீவிரவாதப் படை?: பா.ஜ.க. சந்தேகம்

Subscribe to Oneindia Tamil

வீரப்பனை தமிழர் படையினர் கைது செய்துள்ளனரா என்று எனக்குத் தெரியவில்லை என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்டாக்டர் கிருபாநிதி கூறினார்.

விழுப்புரத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், ராஜ்குமார் சிறந்த நடிகராக இருந்தாலும் சரி. சாதாரண மனிதராக இருந்தாலும் சரி.அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டியது நமது முக்கிய நோக்கமாகும்.

அவரை வீரப்பன் பிடியிலிருந்து மீட்கவும், அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையிலும் தமிழக, கர்நாடக அரசுகள்பாடுபட்டு வருகிறது.

சந்தனக் கடத்தல் வீரப்பன் பல கொலைகளை செய்திருக்கிறான். பல யானைகளைக் கொன்றிருக்கிறான். தந்தம், சந்தனமரங்களையும்கடத்தியிருக்கிறான்.

ஆகவே வீரப்பன் விஷயத்தில் தமிழக அரசு ஜாக்கிரதையாகவே நடந்து வருகிறது. வீரப்பனுக்கு பொதுமன்னிப்பு கொடுக்க வேண்டும்என்று தமிழக பா.ஜ.க கோரவில்லை.

வீரப்பன் மக்கள் இடத்தில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதால் காவிரி நீரைப்பற்றி பேசுகிறான். தமிழர் படை வீரப்பனைத்தூண்டி விடுகிறதா என்பது பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. முதலில் தமிழர் படை காட்டில் தான் இருக்கிறதா என்று தமிழக அரசுயோசிக்க வேண்டும் என்றார் கிருபாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+