டி.வி.எஸ்சின் காஸ் மூலம் இயங்கும் ஸ்கூட்டர்
சென்னை:
காஸ் மூலம் இயங்கும் வாகனங்களால் சுற்றுப்புறச் சூழல் கெடுதல் குறைகிறது என்று தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஷீலாராணி சுங்கத்தெரிவித்தார்.
இரண்டு சக்கர வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற டி.வி.எஸ்.நிறுவனம் காஸ் மூலம் இயங்கும் ஸ்கூட்டரை சனிக்கிழமை சென்னையில் இயக்கிக் காட்டியது.
இதில் கலந்து கொண்டு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஷீலாராணி கூறியதாவது:
பெட்ரோல் மற்றும் டீஸல் வாகன புகையில் இருக்கும் கார்பன் மோனாக்ஸைடு மற்றும் கார்பன் துகள்கள் சுற்றுப்புற சூழலில் பெருமளவில் மாசுஏற்படுத்துகின்றன.
காஸ் மூலம் இயங்கும் வாகனத்தில் கார்பன் மோனாக்ஸைடு கிடையாது. இனால் சுற்றுப்புற சூழலில் பெருமளவு மாசு குறைகிறது.
இந்நிலையில் காஸ் மூலம் இயங்கும் ஸ்கூட்டரை டி.வி.எஸ் நிறுவனம் தயாரித்து அதற்கான மத்திய அரசின் அங்கீகாரத்தை எதிர்நோக்கியுள்ளது.இவற்றுக்கு விரைவில் அனுமதி கிடைத்து விடும் என்று நம்பலாம் என்றார் ஷீலா ராணி.












Click it and Unblock the Notifications