பாண்டிச்சேரியில் கொதித்தெழுந்த நர்சுகள்... அறையைவிட்டு வெளியேற முடியாமல் தவித்த முதல்வர்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் பயிற்சி பெற்ற செவிலியர் சங்கம் சார்பில் நர்சுகள் இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி நர்சுகள் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பாண்டிச்சேரி பொதுமருத்துவமனை முன்பு இவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் ஜிப்மர் மருத்துவமனைக்குஅனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்காக புதுவை மாநில அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனக் கவுரவத் தலைவர் பாலமோகன், சுகாதார அமைச்சர்வலசராஜ் ஆகியோரை நர்சுகள் சங்கத் தலைவி கலா, செயலாளர் கீதா ஆகியோர் சந்தித்தனர்.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. தொடர்ந்து முதல்வர் சண்முகத்தை சந்தித்துப் பேசினார்கள். முதல்வர் சம்பந்தப்பட்ட அமைச்சர், தலைமைச் செயலாளர்ஆகியோரைத் தொடர்பு கொண்டு போராட்டத்துக்கு தீர்வு காண்பதாகக் கூறினார்.
முதல்வர் அளித்த வாக்குறுதியில் நம்பிக்கை இல்லாத நர்சுகள் சனிக்கிழமை மதியம் சட்டசபை முன் திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில்ஈடுபட்டனர். இதனால் அமைச்சரவைக் கூட்டம் முடிந்து வெளியே வரமுயன்ற முதல்வர் சண்முகம் மற்றும் அமைச்சர்கள் சட்டசபையை விட்டு வெளியேவரமுடியாமல் தவித்தனர்.
உங்களைக் கைது செய்கிறோம் என்று போலீஸார் வந்தனர். அப்போது போலீஸாருக்கும், நர்சுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அதன்பிறகு நடந்த பலத்த வாக்குவாதங்கள், குழப்பங்களுக்குப் பிறகு மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் பொதுப்பணித்துறைஅமைச்சர் கண்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் வலசராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.
பேச்சுவார்த்தை முடிந்து முதல்வர் அறையை விட்டு அமைச்சர்கள் அனைவரும் வெளியேறிய பின்பும் அந்த அறையிலேயே அமர்ந்து தர்ணா போராட்டம்நடத்தினார்கள் நர்சுகள். முதல்வரும், பிற அமைச்சர்களும் சமாதானப்படுத்தப் பார்த்தனர். ஆனால் நர்சுகள் யாரும் கேட்கவில்லை. இதையடுத்து மாலை5.30 மணிக்கு முதல்வர் அங்கிருந்து வெளியேறி விட்டார்.
புதுவை வரலாறிலேயே இது மாதிரியான போராட்டங்கள் சட்டசபையில் நடந்ததில்லை. போராட்டம் இன்னும் தீவிரமடைந்துள்ளது.
மாநிலத்தில் உள்ள மற்ற அரசு சங்கங்களும், நர்சுகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் களமிறங்க இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications