சிறையிலிருந்து ஆசிரமத்துக்கு வந்திருந்த பிரேமானந்தா..

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

தமிழகத்தையே ஒரு காலத்தில் கலக்கிய கற்பழிப்பு புகழ் பிரேமானந்தாவை நினைவிருக்கிறதா?

கற்பழிப்பு வழக்குகளில் சிக்கிய பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிறையில்கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் அவரது ஆசிரமம் இன்னும் திருச்சியில் இயங்கிக் கொண்டு தானஇருக்கிறது.

கம்பிகளுக்கு பின்னால் இருந்து கொண்டே அவர் ஆசிரமத்தை நடத்திக் கொண்டு தான் இருக்கிறார். கடந்த மாதம்26 ம் தேதி முதல் ஆசிரமத்தில் பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுள்ளன.

சிறப்புப் பூஜைகள், புனஸ்காரங்கள் என அசத்திக் கொண்டிருக்கிறது ஆசிரமம்.

இந்த சிறப்புப் பூஜைகளில் கலந்து கொள்வதற்காக பிரேமானந்தாவும் ஆசிரமத்துக்கு வந்து சென்றுள்ளார். கடந்தமாதம் 26ம் தேதியே ஆசிரமத்துக்கு வந்துவிட்ட பிரேமானந்தா ஆகஸ்ட் 11ம் தேதி வரை அங்கு தான்தங்கியிருந்தாராம்.

4 போலீசார் புடை சூழ மிகுந்த பாதுகாப்புடன் சிறையிலிருந்த வந்தார் பிரேமானந்தா. அவர் ஆசிரமத்தில்தங்கியிருந்த கடந்த 15 நாட்களும் போலீசாரும் உடன் இருந்துள்ளனர்.

பிரேமானந்தாவின் வருகையையொட்டி பல்வேறு வெளிநாட்டு சிஷ்யைகளும் ஆசிரமத்துக்கு வந்திருந்தனர்.அவரிடம் ஆசி பெற்றனர். சிறப்புப் பூஜைகள் 11ம் தேதி நிறைவடைந்தன. உடனடியாக பிரேமானந்தா சிறைக்குமீண்டும் கொண்டு செல்லப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+