ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே....

Subscribe to Oneindia Tamil

ஆடுவோமே -பள்ளுப் பாடுவோமே;

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று (ஆடு)

சரணங்கள்

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப்

பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை

ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை

ஏய்ப்போருக் கேவல் செய்யும் காலமும் போச்சே. (ஆடு)

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்

எல்லாரும் சமமென்பது உறுதியாச்சு;

எங்குகொண் டேவெற்றி ஊதுவோம் - இதைத்

தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே (ஆடு)

எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும்

ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே - இனி

நல்லோர் பெரியரென்றும் காலம் வந்ததே - கெட்ட

நயவஞ்சகக் காரருக்கு நாசம் வந்ததே (ஆடு)

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்

உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.

விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம் - வெறும்

வீணருக்கு உழைத்துடலும் ஓயமாட்டோம். (ஆடு)

நாமிருக்கும் நாடுநமது என்பதறிந்தோம் - இது

நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் - இந்தப்

பூமியில் எவர்க்கும்இனி அடிமைசெய்வோம் - பரி

பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். (ஆடு)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+