இங்கிலாந்து அணியில் மீண்டும் முல்லாளி
லண்டன்:
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில், வேகப்பந்துவீச்சாளர் ஆலன் முல்லாளிசேர்க்கப்பட்டுள்ளார்.
லீட்ஸ் மைதானத்தில் திங்கள்கிழமை இப்போட்டி துவங்குகிறது. இந்த மாததுவக்கத்தில், டெர்பிஷயர் அணிக்கு எதிரான கவுன்டி போட்டியில் 14 விக்கெட்டுகளைமுல்லாளி வீழ்த்தியிருந்தார். இதுவே இங்கிலாந்து அணிக்கு இவர் நுழையகாரணமாயிற்று.
முல்லாளி அணியில் இடம் பெற்றுள்ள நிலையில், சுழற்பந்துவீச்சாளர் ராபர்ட் கிராப்ட்அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
கடைசியாக கடந்த ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவுக்கானடெஸ்ட் தொடரில்முல்லாளி இடம் விளையாடினார்.
தற்போதைைய தொடரில் இங்கிலாந்தும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் தலா ஒருவெற்றியுடன் உள்ளன.
அணி விவரம்.
நசீர் ஹுசைன் (கேப்டன்), மைக் ஆதர்டன், டிரஸ்கோதக், கிரஹாம் தோர்ப், அலெக்ஸ்டூவர்ட், மைக்கேல் வாகன், கிரீம் ஹிக், கிரேக் ஒயிட், டொமினிக் கார்க், காடிக்,டேரன் காக், ஹோகர்ட், முல்லாளி.












Click it and Unblock the Notifications