எனது கணவரை விடுவியுங்கள்...ராஜ்குமார் மனைவி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள் மூன்றாவது முறையாக சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு ரேடியோ மூலம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

அவர் ரேடியோ மூலம் விடுத்த கோரிக்கை குறித்த விவரமாவது:

கடத்திச் செல்லும் அளவுக்கு என் கணவர் ராஜ்குமார் எந்தத் தவறும் செய்யவில்லை. வேறு யாராவது தவறு செய்திருக்கலாம். எனது கணவரை உடனேவிடுவியுங்கள்.

எங்கள் வீட்டில் குழந்தைகள் அனைவரும் அவரைப் பார்க்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அவரை நீண்ட தூரம் நடக்க வைத்து விடாதீர்கள்.அவரது உடல்நிலை குறித்து தகவல் அனுப்பி இருந்தீர்கள். கேசட்டை டிவியில் போட்டு பார்த்தோம். ரொம்ப மகிழ்ச்சி. குடும்பத்தில் உள்ள அனைவரும்அந்த கேசட்டையே திரும்ப, திரும்ப பார்த்து வருகின்றனர்.

நீங்கள் ஆஞ்சனேயர் பக்தர். என் கணவர் ராஜ்குமாரும் ஆஞ்சனேயர் அருளால் பிறந்தவர்தான். அவரை உடனே விடுவிப்பதற்கான எண்ணத்தை ஆஞ்சனேயர்உங்களுக்குத் தரட்டும். மீண்டும் கேட்டுக் கொள்கிறேன் அவரை உடனடியாக விடுவியுங்கள் என பர்வதம்மா உருக்கமாக வேண்டுகோள்விடுத்துள்ளார்.

ராஜ்குமாருக்கு வீடியோ கேசட்:

இதற்கிடையே ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள் மற்றும் குடும்பத்தினர் ஒரு வீடியோ கேசட்டில் பேசி, சில தகவல்களை ராஜ்குமாருக்கு தெரிவித்துஇருக்கிறார்கள். இதே கேசட்டில் ராஜ்குமாரின் நெருங்கிய நண்பர்கள், ரசிகர்களும் பேசி உள்ளனர்.

நக்கீரன் கோபால் 2 வது தடவையாக இன்னும் 2 நாட்களில் வீரப்பனுடன் பேச்சு வார்த்தை நடத்த காட்டுக்குச் செல்கிறார். அப்போது அவர் மூலம்பர்வதம்மாள் மற்றும் குடும்பத்தினர் பேசிய வீடியோ கேசட் கொடுத்து அனுப்பப்படும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+