இந்தியாவைத் துண்டாட நினைத்தால் ... பாக்.கிற்கு வாஜ்பாய் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

Vajpayeeஇந்தியாவில் பிளவையும், பிரிவினையையும் ஏற்படுத்தி விடலாம் என்று பாகிஸ்தான் காணும் கனவு ஒருபோதும் பலிக்காது என்று பிரமதர் வாஜ்பாய்கூறியுள்ளார்.

இந்தியாவின் 54 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் வாஜ்பாய் செங்கோட்டையில் கொடியேற்றி வைத்துப் பேசியதாவது:

எவ்வளவோ இன்னல்களைக் கடந்து நாம் இன்று இந்தியாவின் 54 வது சுதந்திர தினத்தில் காலடி எடுத்து வைத்துள்ளோம். முதலில் அனைவருக்கும்எனது சுதந்திரதின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வன்முறை, தீவிரவாதம் மூலம் எதையும் சாதிக்க முடியும் என்று பாகிஸ்தான் நினைத்தால் அதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும். மில்லினியம்வருடத்தின் முதல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நம்மை எதிர்நோக்கியுள்ள பிரச்சனை எல்லைப்பகுதியில் உள்ள பிரச்சனைதான்.

எல்லைப்பகுதியில் தீவிரவாதத்தைத் தூண்ட வேண்டும் என்பது தான் பாகிஸ்தானின் குறிக்கோள். அதற்கு இந்தியா சரியான பதிலடி கொடுக்கும்.எல்லைப்பகுதியில் நடக்கும் பதட்டத்தைத் தணிக்க பேச்சுவார்த்தை மூலமே நிரந்தரத் தீர்வு காண முடியும்.

அடுத்ததாக நம்மை எதிர்நோக்கியுள்ள பிரச்சனை பொருளாதாரம். இந்திய மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நம்மை எதிர்நோக்கியுள்ள பொருளாதாரப்பிரச்சனையைச் சமாளிக்க வேண்டும்.

பசி, பஞ்சம், வேலையில்லாத் திண்டாட்டம், மருத்துவ வசதி இல்லாத கிராமங்கள் ஆகிய அவலங்கள் நாட்டில் ஒழிய வேண்டும். நிர்வாகம், நீதித்துறை,கல்வி மூன்றும் செம்மையாக செயல்பட வேண்டும். ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வாழ்க்கைத் தரம் உயர்வதே இந்தியக் குடிமகனின் உண்மையானஉயர்வு.

தொலைத்தொடர்புத் துறை தனியாருக்கு கொடுக்கப்பட்டதால் அரசுக்கு நஷ்டம் எதுவும் இருக்காது. இந்தியா முழுவதும் மின்சாரம் திருடு போவதைத்தடுக்கவும், மின்சாரக் கசிவைத் தடுக்கவும் அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இந்நாளில் இந்தியாவை எதிர்நோக்கியுள்ள முக்கியமான பிரச்சனை நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி. இவையிரண்டும் ஒன்றுக்கொன்று நேர்முகத்தொடர்புடையவை. நாட்டில் பாதுகாப்பு சரியாக இருந்தால்தான் வளர்ச்சியடைய முடியும்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் வளர்ச்சியில் அரசு அதிக அக்கறை எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். இனிமேல்நிர்வாகம் மற்றும் நீதித்துறையில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கத் திட்டமிட்டுள்ளது.

இயற்கைச் சீற்றம், மக்கள் தொகைக் கட்டுப்பாடு, பொது இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றில் இந்திய மக்கள்ஒவ்வொருவரும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

எதிர்காலத்தில் வளர்ச்சிமிக்க, எழுச்சிமிக்க, மகிழ்ச்சியான இந்தியா உருவாக நாட்டிலுள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், டாக்டர்கள்,என்ஜினியர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

அடுத்த ஆண்டுக்குள் தேசிய சுகாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

தற்போது, இந்தியாவில் எய்ட்ஸ் நோய் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலை மாற வேண்டும். இதற்காக மத்திய அரசு பல்வேறு விதமானவிழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகிறது.இதற்குப் பொதுமக்களும் ஆதரவு கொடுக்க வேண்டும்.

2010 க்குள் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி என்ற நிலை உருவாக வேண்டும். சிறுவர்கள் அனைவரும் எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கவேண்டும் என்ற நிலை உருவாக வேண்டும். அதற்கு அரசு வழிவகை செய்யும்.

பெண்களுக்கு பட்டப்படிப்பு வரை கல்வி இலவசமாக அளிக்கப்படும். ஏழை நடுத்தர மக்கள் இதனால் பயனடையலாம்.

இந்தியாவில் பொருளாதாரம் என்ற வண்டி சரியாக ஓட வேண்டுமெனில் அறிவியல் தொழில்நுட்பம் என்ற என்ஜின் நிலையாக, பழுதடையாமல் இருக்கவேண்டும் என்றார் பிரதமர் வாஜ்பாய்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+