ராமேஸ்வரம் வந்த 17 அகதிகள்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இலங்கையிலிருந்து படகு மூலம் ராமேஸ்வரம் வந்த 17 அகதிகளை இந்திய கடற்படையினர் மீட்டனர்.

இலங்கையின் ராணுவ வீரர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்ந்து போர் நடந்து வருகிறது.

இதனால் தமிழர் வாழும் பகுதியில் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இலங்கையிலிருந்துதமிழர்கள் அகதிகளாக படகுகள் மூலம் ராமேஸ்வரத்திற்கு தப்பி வந்த வண்ணம் உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை 5 ஆண்கள், 8 பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 17 தமிழர்கள் அகதிகளாக படகு மூலம்ராமேஸ்வரம் வந்து கொண்டிருந்தனர்.

இவர்கள் நடுக்கடலில் கச்சத்தீவு அருகே வந்து கொண்டிருந்தபோது இந்திய எல்லையில் ரோந்து சுற்றி வந்தராமேஸ்வரம் கடற்படையினர் இவர்கள் வந்த படகை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் அவர்களை ராமேஸ்வரம் கடற்படை முகாமிற்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில்இவர்கள் அனைவரும் இலங்கையிலிருந்து ரூ 75 ஆயிரத்திற்குப் படகு ஒன்றை வாங்கி அதன் மூலம் ராமேஸ்வரம்வர முயற்சித்ததாகக் கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் வந்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணைக்குப்பின் அவர்கள் அனைவரும் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் தப்பி வந்தது குறித்து அகதி ஜான்சன் கூறியதாவது:

தமிழர்கள் வாழும் பேசாலை பகுதியில் விஷக்காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் ஏராளமானோர் இறந்துள்ளனர்.மேலும் உணவுப்பொருட்கள் கிடைக்காமல் பலர் பட்டினியால் மடிகின்றனர். எனவே உயிர்பிழைத்தால் போதும்என்று இங்கு வந்து விட்டோம் என்றார் ஜான்சன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+