For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதிய அத்தியாயம் படைத்த இன்டோர் கிரிக்கெட்

By Staff
Google Oneindia Tamil News

மெல்போர்ன்:

கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக உள்ளரங்க மைதானத்தில் தென்னாப்பிரிக்க,ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புதன்கிழமைநடந்தது.

மொத்தம் மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடர் மெல்போர்ன் நகரிலுள்ள டாக்லாண்ட்ஸ்ஸ்டேடியத்தில் நடக்கிறது.

வரலாறு படைத்த இந்தப் போட்டியில் தென்ஆப்பிரிக்க கேப்டன் ஷான் போலக் டாஸ்வென்று, ஆஸ்திரேலியாவை பேட் செய்யப் பணித்தார்.

முதலில் ஆடிய ஆஸ்திரேலியா, துவக்கத்திலேயே கில்கிறைஸ்ட்டை இழந்தது.இருப்பினும் பின்னர் வந்த வீரர்கள் சமாளித்து ஆடினர். 42 ஓவர்கள் இறுதியில் 3விக்கெட்டுகளை இழந்து 217 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்திருந்தது.

அணி விவரம்:

ஆஸ்திரேலியா: மார்க் வாக், கில்கிறைஸ்ட், ரிக்கி போன்டிங், மைக்கேல் பேவன்,டேமியன் மார்ட்டின், ஸ்டீவ் வாக், ஷான் லீ, இயான் ஹார்வி, ஷான் வார்னே, பிரெட் லீ,கிளன் மெக்கிராத், ஆண்ட்ரூ சைமன்ட்ஸ்.

தென்ஆப்பிரிக்கா: கேரி கிர்ஸ்டன், ஹால், ஜேக்கஸ் கல்லிஸ், டேரில் கல்லினன், ரோட்ஸ்,நீல் மெக்கன்சி, லேன்ஸ் குளூஸ்னர், போலக், பெளச்சர், டெல்மாச்சுஸ், ஹேவர்ட், டிப்பனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X