கருணாநிதியைச் சந்தித்தார் கோபால்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக இரண்டாவது முறையாகக் காட்டுக்குச் செல்லும் நக்கீரன் கோபால் புதன்கிழமை காலை முதல்வர்கருணாநிதியைச் சந்தித்தார்.

இரு மாநில அரசுத் தூதர் கோபால் இரண்டாவது முறையாக புதன்கிழமை இரவு அல்லது வியாழக்கிழமை அதிகாலை காட்டுக்குச் செல்வார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கோபால் புதன்கிழமை காலை முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். அப்போது நடிகர் ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார்,ராகவேந்திர ராஜ்குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.

அவர்கள், கோபால் மூலம் காட்டுக்கு எடுத்துச் செல்வதற்காக இரண்டு ஆடியோ கேசட்டுக்களை முதல்வர் கருணாநிதியிடம் கொடுத்தனர். அந்தஆடியோ கேசட்டுக்களில் டாக்டர் ராஜ்குமாருக்கும், பிற பிணைக்கைதிகள் மூன்று பேருக்கும் சேரும் வகையில் பல செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூட்டு வலியால் அவதிப்பட்டு வரும் நடிகர் ராஜ்குமாருக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் அடங்கிய பை ஒன்றும் கோபாலிடம்கொடுக்கப்பட்டது.

அது தவிர தமிழர் தேசிய விடுதலைப் படை மற்றும் தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை விடுவிப்பதற்கான உத்தரவு குறித்ததஸ்தாவேஜூகள், மற்றும் தடா சட்டத்தின் கீழ் மைசூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள 51 கைதிகளை விடுவிப்பதற்கான தஸ்தாவேஜூகள்ஆகியவற்றையும் காட்டுக்குச் செல்லும்போது கோபால் தன்னுடன் எடுத்துச் செல்வார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+