லஷ்கர் தீவிரவாதிகள் மீது ஹிஸ்புல் தீவிரவாதிகள் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளின் மறைவிடம் மீது ஹிஸ்புல்முஜாஹிதின் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்பு வட்டாரத்தில்தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஒரு தீவிரவாதிகாயமடைந்ததாகவும் அது தெரிவித்தது. சூரன்கோட் பகுதியில் நிக்கி மோரி தோக்கிராமத்தில் திங்கள்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்ததாகவும் பாதுகாப்பு வட்டாரம்தெரிவித்தது.
தீவிரவாதிககளிடையே பிளவு ஏற்பட்டுள்ளதையேஇது காட்டுவதாகவும் பாதுகாப்புவட்டாரம் தெரிவித்துள்ளது. தோக் கிராமத்தினருடன் சேர்ந்து ஹிஸ்புல் தீவிரவாதிகள்தாக்கதலில் ஈடுபட்டதாகவும் பாதுகாப்பு வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமைதான் இந்தத் தாக்குதல் குறித்து ராணுவத்தினருக்குத் தெரிய வந்தது.இதையடுத்து சம்பவம் நடந்த கிராமத்திற்கு அவர்கள் விரைந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications