வீரப்பனிடம் செல்போன்?
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனிடம் பேஜர், செல்போன் போன்றவை இருப்பதாகக் கர்நாடக போலீஸ் கண்காணிப்பாளர் ஆர்கேஷ் தெரிவித்துள்ளார்.
வீரப்பனைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கர்நாடக அதிரடிப்படையியின் கண்காணிப்பாளராக இருந்தவர் கே.ஆர்கேஷ். இவர், வீரப்பன் குறித்தஅறிக்கை ஒன்றைக் மே மாதம் கர்நாடக அரசிடம் சமர்ப்பித்தார். அதில் வீரப்பன் குறித்த பல்வேறு தகவல்களை அவர் தெரிவித்திருந்தார்.
ஆர்கேஷ் கொடுத்த அறிக்கையில் உள்ள விவரம்:
வீரப்பனிடம் புதிதாக 5 இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பட்டதாரி இளைஞர்கள் என்று தெரிகிறது. அவர்களில் ரமேஷ் என்ற இளைஞர்என்ஜினியரிங் பட்டதாரி வாலிபர்.
ஒரு வருடத்துக்கு முன் வீரப்பனிடம் சேர்ந்த இவர்கள் தமிழ்நாடு விடுதலைப்படை அமைப்பைச் சேர்ந்தவர்கள். வீரப்பன் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துஆயுதப் பயிற்சியும் அளித்து வருகிறான்.
விடுதலைப்புலிகள் மற்றும் தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களிடம் உதவி பெற வேண்டும் என்று வீரப்பன்ஆசைப்படுகிறான். ஆனாலும் எந்த தீவிரவாத அமைப்புக்கும் கட்டுப்பட மாட்டேன். சுதந்திரமாகத்தான் செயல்படுவேன் என்றும் கூறி வருகிறான்.
வீரப்பனிடம் பேஜர் இருந்தது. அதன் மூலம் போலீஸ் அதிகாரிகளின் நடமாட்டத்தை அறிந்து கொண்டான். ஆனால் அவனிடம் பேஜர் இருப்பதுபோலீஸாருக்குத் தெரிந்து விட்டதால் அவன் அதைத் தூக்கி எறிந்து விட்டான். அவனிடம் செல்போன் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.
வீரப்பனுக்கு வலது கரமாகவும், துணை தளபதியாகவும் இருப்பவன் சேத்துக்குளி கோவிந்தன். அடுத்தது சந்திரசேகரன். இவன்தான் கிராம மக்களிடம்தொடர்பு கொண்டு உணவுப் பொருட்களை வாங்கி வருபவன் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஆர்கேஷ்.












Click it and Unblock the Notifications