ஹிங்கிஸ், தேவன்போர்ட்டுக்கு முதல் சுற்றில் வெற்றி
Subscribe to Oneindia Tamil
மான்ட்ரீல்:
கனடா ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் மார்ட்டினா ஹிங்கிஸ், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் எளிதான வெற்றியைப் பெற்று அடுத்துசுற்றுக்கு முன்னேறினர்.
லின்ட்ஸே தேவன்போர்ட் மட்டும் பெல்ஜியத்தின் ஜஸ்டின் ரெனினுடனான ஆட்டத்தில் சற்று சிரமப்பட்டு வெற்றி பெற்றார். முதல் செட்டை இழந்ததேவன்போர்ட் அடுத்த இரு செட்டுகளிலும் சுதாரித்து ஆடி வெற்றி பெற்றார்.
ரஷ்யாவின் பெட்ரோவுடனான ஆட்டத்தில் முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் வென்ற ஹிங்கிஸ், இரண்டாவது செட்டில் 1-3 என்று பின்தங்கினார்.பின்னர் நன்றாக ஆடி அந்த செட்டை 6-3 என்ற கணக்கில் வென்றார்.
செரீனா வில்லியம்ஸும் தன்னை எதிர்த்து ஆடிய வீராங்கனையை எளிதாகத் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.












Click it and Unblock the Notifications