ஒலிம்பிக் ஹாக்கியில் தங்கம் வென்றால் ரூ. 50 லட்சம் பரிசு
டெல்லி:
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக்போட்டியில் ஹாக்கி ஆட்டத்தில் இந்திய அணி தங்கம் வென்றால் ரூ. 50 லட்சம்பரிசாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி தேசிய மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய ஹாக்கி அணியைவழியனுப்பும் விழாவில் சாம்சங் நிறுவனத்தின் இந்திய பிரிவு துணைத் தலைவர்(விற்பனை) ஜெ.எச். பார்க் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
இந்திய ஹாக்கி அணிக்கு சாம்சங் நிறுவனம்தான் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணிதங்கம் வென்றால் அணியின் பயிற்சியாளர்களுக்கு ரூ. 25 லட்சம் பரிசாகஅளிக்கப்படும் என்றும் பார்க் கூறினார்.
அணி வீரர்கள் அனைவருக்கும் சாம்சங் நிறுவனத்தின் சிறப்பு நினைவுப் பரிசுகளைபார்க் வழங்கினார்.
தற்போது இந்திய ஹாக்கி அணிக்கு 22 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தஅணிதான் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல உள்ளது. இந்த அணிக்கான வழியனுப்புவிழாதான் டெல்லியில் நடைபெற்றது.
அங்கு சில பயிற்சி ஆட்டங்களுக்குப் பிறகு பிரிஸ்பேன் நகரில் ஆகஸ்ட் 21-ம் தேதிஒலிம்பிக் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்படும்.
இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் யார் என்பதும் அப்போது முடிவு செய்யப்படும்என்று இந்திய ஹாக்கி சங்கச் செயலர் ஜோதி குமரன் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.