400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
லீட்ஸ்:
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்து வீச்சாளர் கர்ட்லி ஆம்புரோஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக லீட்ஸில் நடைபெற்று வரும் 4-வது கிரிக்கெட் டெஸ்ட்டில் அவர் இச் சாதனையை படைத்தார். இதன் மூலம் டெஸ்ட்கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அவர் 5-வது இடம் பெற்றார்.
97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆம்புரோஸ், ஒரு இன்னிங்ஸில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட்டுகளை 22 முறை வீழ்த்தியுள்ளார். ஒரு டெஸ்ட்போட்டியில் 10 அல்லது அதற்கு மேல் விக்கெட்டுகளை 3 முறை வீழ்த்தியுள்ளார். 45 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இவரது சிறந்த பந்துவீச்சாகும்.
400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கார்ட்னி வால்ஷ் முதலிடத்தில் உள்ளார். அவர் 120டெஸ்டுகளில் விளையாடி 472 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
இரண்டாவது இடத்தில் இந்தியாவின் கபில்தேவ் (434 விக்கெட்டுகள்), 3-வது இடத்தில் நியுசிலாந்தின் ரிச்சர்டு ஹாட்லி (431 விக்கெட்டுகள்),4-வது இடத்தில் பாகிஸ்தான் வாஸிம் அக்ரம் (407 விக்கெட்டுகள்) உள்ளனர்.
400 விக்கெட்டுகளை அடுத்து நெருங்கக் கூடிய இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே ஆவார். அவர் 84 டெஸ்டுகளில் 366 விக்கெட்டுகளைவீழ்த்தியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications