ஒலிம்பிக்: தீவிர பயிற்சியில் இந்திய ஹாக்கி அணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சன் டி.வியில் 12-ஆம் தேதி சனிக்கிழமை இரவு ஒரு பேட்டி ஒளி பரப்பாகியது. அதை வாசகர்கள் பலர் பார்த்திருக்கக்கூடும். அது தொடர்பாகவாசகர்கள் மனதில் சில கேள்விகள் எழலாம் என்று நினைத்து, சில விளக்கங்களை அளிக்க இந்தக் கடிதம் எழுதுகிறேன்.

சன் டி.வியில் பேட்டி கண்டவர் வீரபாண்டியன். பேட்டி அளித்தவர் நக்கீரன் ஆசிரியர் கோபால். பேட்டி சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பற்றியது.

பேட்டியின்போது வீரபாண்டியன் தன்னுடன் கேமிரா, டேப் ரிக்கார்டர் போன்ற பல விஷயங்களை எடுத்துச் செல்கிற கோபால், ஒரு துப்பாக்கியையும்எடுத்துச் சென்று, வீரப்பனைக் சுட்டிருக்க வேண்டும் - என்று ஒரு பத்திரிக்கையாளர் சொல்கிறாரே, அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?என்று கேட்டார்.

இதற்கு நக்கீரன் கோபால், வேறு யார் அப்படி சொன்னது?சோதான் சொல்லியிருக்கிறார். அவருக்கு நான் உயிருடன் இருப்பது பிடிக்கவில்லை போல்இருக்கிறது என்று பதில் அளித்தார்.

இதையடுத்து பணம் கை மாறாமலா இருந்திருக்கும்? வீரப்பன் ஆயுதங்களை வாங்க வேண்டாமா? தன்னுடன் இருப்பவர்களை சம்ரட்சணை செய்யவேண்டாமா? தனக்கு தகவல் தருகிறவர்களுக்கு சன்மானங்களைக் கொடுக்க வேண்டாமா?அடுத்து ஆள் கடத்தலை செய்ய வேண்டாமா?இதற்கெல்லாம் பணம் தேவைப்படுமே? கை மாறாமலா இருந்திருக்கும். - என்று அந்தப் பத்திரிக்கையாளர் கேட்டிருக்கிறாரே - அதற்கு என்னசொல்கிறீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு நக்கீரன் ஆசிரியர் கோபால், எல்லாம் வளமான கற்பனை. நான் என் சொந்தப் பணத்தில் போய் வந்தேன். நான் செலவு செய்த பணம் என்னுடையபணம். நான் ஒரு சவால் விடுகிறேன். சோ காட்டில் 25 கிலோமீட்டர் நடந்து போய், வீரப்பனைச் சந்தித்து ராஜ்குமாரை மீட்டுக் கொண்டு வரட்டும்என்று பதில் கூறினார்.

இதுபற்றறி. கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். பேட்டி என்கிற பெயரில் செய்திகளைத் திரித்துக் கொடுப்பது சன் டி.வி.யின் வழக்கம்என்பது தெரிந்த விஷயம்தான்.

இந்தப் பேட்டியிலும் செய்தித் திரிப்பு இடம் பெற்றது. துப்பாக்கி எடுத்துக் கொண்டு போய் வீரப்பனைச் சுட்டிருக்க வேண்டும் என்று நான் ஒரு போதும்சொல்லவே இல்லை. அப்படி நான் சொல்லியிருந்தால் நக்கீரன் கோபால் கூறிய மாதிரி, அவர் உயிருடன் இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை என்றுதான்ஆகிவிடும்.

ஏனென்றால், கோபால் துப்பாக்கி எடுத்துக் கொண்டு போய் வீரப்பனை சுட்டு விடலாம்; அதற்குப் பின் உயிருடன் திரும்ப முடியாது ; வீரப்பனுடையகூட்டாளிகள் அவரைத் தீர்த்துக் கட்டி விடுவார்கள். இப்படிப்பட்ட முட்டாள்தனமான யோசனை எனக்குத் தோன்றாது. சன் டி.வி.யைச் சார்ந்தவர்களுக்குஇம்மாதிரியான யோசனை தோன்றும் என்பது இப்போது புரிந்தது.

இப்படிகோபால் துப்பாக்கி எடுத்துச் சென்று வீரப்பனைச் சுட வேண்டும் என ஒரு பத்திரிக்கையாளர் சொல்கிறாரே? என்று கேட்டு, அந்தப்பத்திரிக்கையாளன் நான்தான் என்கிற வகையில் பேட்டி நடத்தப்படுவதற்கு, ஒரு நொண்டிச் சாக்கு சன் டி.வி.க்கு இருப்பது எனக்குப் புரிகிறது.

பி.பி.சி.ரேடியோ பேட்டி ஒன்றிலும், சி.என்.பி.சி டெலிவிஷன் பேட்டி ஒன்றிலும் it may be difficult to apprehendVeerappan; but it would be easy to eliminate him என்று நான் கூறியிருந்தேன்.அதாவது வீரப்பனைப் பிடிப்பது கடினம்; தீர்த்துக் கட்டுவது எளிது என்றுசொனனேன்.

இதுதவிர, நக்கீரன் கோபால் மட்டுமல்ல; வேறு பத்திரிக்கையாளரும் மற்றும் சிலரும்வீரப்பனைச் சந்தித்திருக்கிறார்கள். அவர்களில் யாரையாவது பின் தொடர்ந்து சென்று,வீரப்பன் இருக்கும் இடத்தை போலீஸ் அறிந்து கொண்டிருக்க வேண்டாமா? என்றும்கேட்டிருந்தேன்.

இந்த என்னுடைய பேட்டியின் சாராம்சம் தினகரன் பத்திரிக்கையில் தவறாகவெளியாகியது. நக்கீரன் கோபால் ஒருமுறைக்குப் பலமுறை வீரப்பனைச் சந்திக்கமுடிவதைப் பார்க்கும் போது, யாராவது தூதர் மூலமாவது வீரப்பனைத் தாக்க போலீஸ்யோசிக்க வேண்டும். மக்கள் நடமாட்டமில்லாத காட்டிற்குள் தான் வீரப்பன்ஓடுகிறான். எனவே, அவனை எளிதில் சுட்டுக் கொல்லலாம். அவனைப் பிடிக்கமுயற்சி செய்வதை விட, இது சிறந்தது ... என்று நான் கூறியதாக அந்தச் செய்திவெளியாகியது.

இந்தத் தவறான செய்தியை வைத்துத்தான் சன் டி.வி.யின் வீரபாண்டியன் தனதுகேள்வியைக் கேட்டார் என்றே வைத்துக் கொள்வோம். அப்படியிருந்தால் கூட. அவர்தன் சரக்கை அதில் ஏன் சேர்க்க வேண்டும்? தன் வசதிக்கேற்ப அதை ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்? கோபால் துப்பாக்கி எடுத்துக் கொண்டு போய் வீரப்பனைச் சுடவேண்டும் என்று நான் சொன்னதாக, தினகரனின் தவறான செய்தி கூடகூறவில்லையே?

ஒரு பத்திரிக்கையாளர் என்று குறிப்பிட்ட வீரபாண்டியன், கோபால், அது சோதான்என்று கூறிய போது. இல்லை. அது வேறு ஒருவர் என்று கூறியிருந்தால் பிரச்சனைஇல்லை. ஆனால் அவர் அப்படிச் சொல்லவில்லை.

அதாவது கோபால் கூறியது சரியானதுதான் என்று உறுதிப்படுத்துகிற வகையில்பேட்டியைத் தொடர்ந்தார். அது மட்டுமல்ல, அடுத்து அவர் கேட்ட கேள்வியும்என்னைப் பற்றியதுதான். ஏனென்றால், துக்ளக் தலையங்கத்தில் நான் எழுதியிருந்தகேள்வியைத்தான் அவர் கேட்டார்.

சென்ற இதழ் தலையங்கத்தில் நான், ...இது ஒருபுறமிருக்க, காட்டிலிருந்து வந்தது பத்துகோரிக்கைகள்தானா- என்ற சந்தேகம் நமக்கிருக்கிறது. வீரப்பர், பணம் கேட்காமலாஇருந்திருப்பார்?எத்தனை கோடிகள் கேட்டிருக்கிறாரோ?

அவருக்கு இல்லாத பணக்கஷ்டமா? ஐயோ பாவம்! அடுத்த ஆள் கடத்தல்வரை,அவர் காட்டில் எப்படி காலம் தள்ளுவது?ஆயுதம் வாங்க வேண்டாமா? தன்னுடன்இருக்கிற தமிழ்த் தீவிரவாதிகளை சம்ரட்சணை செய்ய வேண்டாமா? தனக்கு தகவல்தருகிறவர்களுக்கு தகுந்த சன்மானங்களை அவர் வழங்க வேண்டாமா?அடுத்த ஆள்கடத்தலை திட்டமிட வேண்டாமா? இதற்கெல்லாம் எவ்வளவு கோடிதேவைப்படுமோ? அதை தமிழக, கர்நாடக அரசுகள்தானே தரவேண்டும் ... என்றுஎழுதியிருந்தேன். அதுதான் என் அபிப்பிராயம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற