வீரப்பன் கெடு நாளை முடிகிறது
சென்னை:
நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதற்காக தான் போட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வீரப்பன் விதித்திருந்த கெடு சனிக்கிழமையுடன் முடிகிறது.
வீரப்பனின் புதிய கோரிக்கைகளுக்கு அரசு தரப்பில் இருந்து பதில்களும், வீரப்பனுக்கு உங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதால், இரு மாநிலமக்களும் சுகமாக வாழ வழி செய்யும்வகையில் உடனடியாக ராஜ்குமாரையும் மற்றவர்களையும் விடுவிக்கவேண்டும் என்று இரு மாநில முதல்வர்கள்பேசியுள்ள கேஸ்சட்களும், ராஜ்குமாரின் மனைவி, மகன்கள் ராஜ்குமாருக்கு பேசியுள்ள கேஸட்டும் , நக்கீரன் ஆசிரியர் கோபால் மூலமாக வீரப்பனுக்குகொடுத்தனுப்பட்டுள்ளது.
இந்த கேஸட்டுகளுடன் கோபால் , 16-ம் தேதி இரவு காட்டிற்கு கிளம்பிச் சென்றார். சென்னையில் இருந்து காரில் கிளம்பிய கோபால் , அந்தியூர்சென்று அங்கிருந்து மைசூர் செல்லும் காட்டுப் பாதையில் சென்றார்.
வெங்கடேசன், மணிகண்டன், முத்துக்குமார், சத்யமூர்த்தி, பொன்னிவளவன் ஆகிய ஐந்து தமிழ்த் தீவிரவாதிகளையும் விடுவிக்க வேண்டுமென்று வீரப்பன்கேட்டிருந்தான். அதன் படி இந்த ஐந்து தீவிரவாதிகளும் கோபாலுடன் காட்டிற்கு சென்று வீரப்பனிடம் ஒப்படைக்கப்பட்ட பின்புதான். ராஜ்குமார் விடுதலைசெய்யப்படுவார் என்று தெரிகிறது.
அந்தியூர் காட்டுப் பகுதிக்கு, கோபால் சென்றுவிட்டார். இந்த நிலையில் திருச்சியில் நக்கீரன் இணையாசிரியர் காமராஜ் இருக்கிறார். இவர் திருச்சிக்கு சென்றுமூன்று நாட்கள் ஆகிவிட்டன. திருச்சி சிறையில் இருந்து தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்டதும் அவர்களை அழைத்துக்கொண்டு காட்டிற்குள் சென்றுகோபாலிடம் தீவிரவாதிகளை காமராஜ் ஒப்படைப்பார் என்கிறார்கள்.
வீரப்பன் , கேட்டுள்ள ஐந்து தீவிரவாதிகளையும்முழுவதுமாக வழக்குகளில் இருந்து விடுதலை செய்யமுடியாது. அதே நேரத்தில் இவர்களை ஜாமீனில்விடுதலை செய்யக்கோரி வியாழக்கிழமை வரை எந்த கோர்ட்டிலும் மனுத்தாக்கல் செய்யயப்படவில்லை என்கிறார்கள்
19-ம் தேதியுடன் வீரப்பனின் கெடு முடிகின்ற இந்த நேரத்தில் ஐந்து தீவிரவாதிகளுக்கும் சேர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கலுக்குவழக்கறிஞர்கள் தீவரமாக முயற்சித்து வருகிறார்கள். அப்படியே ஜாமீன் வழங்கப்பட்டாலும் தந்தி மூலமாக தீவிரவாதிகள் இருக்கின்ற திருச்சி,சேலம் சிறைகளுக்கு வெள்ளிக்கிழமை ஆறு மணிக்குள் உத்தரவு சென்றாக வேண்டும்.
ஜாமீனில் விடுவது பற்றிய நடைமுறைகள் அவசரகதியில் தொடர்ந்து கொண்டிருக்க.தீவிரவாதிகள் ஜாமீனில் வரமுடயாது என்று சொல்லியிருப்பது தமிழகஅரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications