தமிழ்த் தீவிரவாதிகள் விடுவிக்கப்படுவார்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீரப்பன் கோரும் ஐந்து தமிழ்த் தீவிரவாதிகளை விடுவிப்பது தொடர்பாக கோட்டையில் வெள்ளிக்கிழமை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்முதல்வர் கருணாநிதி.

சந்தனமரக் கடத்தல் வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டு காட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க, அரசு தூதர் நக்கீரன்கோபால் காட்டுக்குள் சென்றுள்ளார்.

வீரப்பன் விதித்த கோரிக்கைகளை நிறைவேற்றியதற்கான ஆதாரங்களுடன் காட்டுக்குள் புகுந்துள்ளார். வீரப்பனை சந்திக்கக் காத்திருக்கிறார்.

இந்நிலையில் வீரப்பனின் முக்கிய கோரிக்கையான 5 தமிழ்த் தீவிரவாதிகள் விடுதலை விவகாரம் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. வீரப்பனின்கோரிக்கைப்படி 5 நக்சலைட்டுகளை விடுவிக்க அரசு போட்டுள்ள உத்தரவுகளை கோபால் எடுத்துச் சென்றுள்ளார்.

சத்தியமூர்த்தி, மணிகண்டன், முத்துக்குமார், பொன்னிவளவன் ஆகியோர் மீது போடப்பட்டிருந்த தேசிய பாதுகாப்புச் சட்ட வழக்கை வாபஸ் பெற்றதற்கானஉத்தரவு, ரேடியோ வெங்கடேசன் மீதுள்ள வழக்கில் தடா சட்டப் பிரிவுகளை நீக்கியதற்கான உத்தரவு ஆகியவற்றுடன், கர்நாடக அரசு 51 பேர் மீதுபோடப்பட்டிருந்த தடா சட்ட வழக்குகளை நீக்கியதற்கான உத்தரவையும் கோபால் எடுத்துச் சென்றுள்ளார்.

அரசு இவ்வாறு உத்தரவுகள் போட்டு விட்டாலே, அடுத்துள்ள சட்ட நடைமுறைகளின் படி இவர்கள் விடுவிக்கப்பட்டு விடுவார்கள் என்பதைவீரப்பனிடம் எடுத்துச் சொல்லும் திட்டத்தோடு கோபால் காட்டுக்குள் இருக்கிறார்.

ஆனால், இந்த 5 தீவிரவாதிகளையும் வீரப்பன் கோரிக்கைப்படி வழக்கில் இருந்து விடுவித்தாலும், சிறையில் இருந்து அரசால் வெளியே அனுப்பமுடியவில்லை. அந்த 5 பேரும் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்து நீதிமன்ற உத்தரவு பெற்று வெளியில் வரும் வகையில் அரசு இந்த ஏற்பாடுகளைசெய்துள்ளது.

அரசின் இந்த ஏற்பாட்டை தீவிரவாதிகள் ஏற்க முன் வரவில்லை. ஜாமீனில் இருந்து வெளிவருவதை அறவே விரும்பவில்லை. மாறாக எல்லாவழக்குகளையும் ரத்து செய்து அவர்களை அறவே விடுவிக்க வேண்டுமென்று வலியுறுத்துகின்றனர்.

இதனால் 5 தமிழ்த் தீவிரவாதிகள் விடுதலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப் பிரச்சனையை எப்படி சமாளிக்கலாம் என்பது குறித்து தமிழகஉள்துறைச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர், தலைமைச் செயலாளர் முத்துசாமி, சட்டத்துறைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வர்கருணாநிதி அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை கோட்யிைல் நடைபெற்றது.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்தக் கூட்டத்தில் தமிழ்த்தீவிரவாதிகள் ஐவர் விடுதலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+