ஹேமு அதிகாரிக்கு சி.கே. நாயுடு விருது
பெங்களூர்:
இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கர்னல் ஹேமு அதிகாரிக்கு சி.கே.நாயுடு விருது வழங்கப்படுகிறது.
இத் தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் லேலேதெரிவித்தார். ரூ. 2 லட்சம் ரொக்கமும், கோப்பையும் கொண்டது இவ் விருது.
சி.கே. நாயுடு விருது பெறும் 6-வது நபர் ஹேமு அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
வாரியத்தின் முன்னாள் தலைவர் என்.கே.பி. சால்வே தலைமையிலான கமிட்டி சி.கே.நாயுடு விருதுக்கு ஹேமு அதிகாரியைத் தேர்வு செய்தது.
பங்கச் ராய், சந்து சர்வத்தே ஆகியோரும் விருதுக்குப் பரிசீலிக்கப்பட்டனர். ஆனால்,இறுதியில் ஹேமு அதிகாரியின் பெயர் தேர்வு செய்யப்பட்டது.
81 வயதான ஹேமு அதிகாரி இந்தியா சார்பில் 1947 முதல் 1959 வரை 21 டெஸ்ட்போட்டிகளில் விளையாடி உள்ளார்.
1971-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை முதன் முதலாக வென்றஇந்திய அணியின் மேனேஜராக ஹேமு அதிகாரி இருந்தார்.
மேலும், இந்திய அணியின் தேர்வுக் குழுவில் உறுப்பினராக 7 ஆண்டுகள்பணியாற்றியுள்ளார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications