இலங்கை தேர்தல்: கூட்டணி சேர ஆர்வம் காட்டாத எதிர்க்கட்சிகள்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை நாடாளுமன்றத்துக்கு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கூட்டணி சேர்வதில் ஆர்வம்காட்டவில்லை.

இலங்கை நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதற்காகசில நாட்களுக்கு முன் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. பின்னர்அக்டோபர் 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கையில் எல்லா அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. ஆனால், பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கூட்டணி சேர்ந்துபோட்டியிட ஆர்வம் காட்டவில்லை.

இதுவரை எந்த எதிர்க்கட்சி கூட்டணியும் உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரனில்விக்ரமசிங்கே, எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரமாட்டோம் என்றுஅறிவித்துள்ளார்.

இடது சாரிக் கட்சியான ஜனகா விமுக்தி பெரமுனா மற்றும் புதிதாக தொடங்கப்பட்டசிங்கள ஊர்மயா கட்சிகளுக்கு இலங்கை தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அளித்துள்ளது.

அக் கட்சிகளும் இன்னும் கூட்டணி ஏதும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

ஆனால் ஆளும் மக்கள் கூட்டணியில் ஏற்கெனவே பல கட்சிகள் அங்கம்வகிக்கின்றன. அக் கூட்டணியில் எந்தப் பிரச்சினை ஏதும் இல்லை. வரும் தேர்தலில்இக் கூட்டணி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் உள்ள அனைத்துத் தமிழ் கட்சிகளும் இதுவரை நடந்த தேர்தல்களில்தனித்தே போட்டியிட்டன. இம் முறையும் அதே நடைமுறையை அவைகடைப்பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

இலங்கையில் தற்போது 1 கோடியே 26 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம்உள்ள அரசியல் கட்சிகள் 42. நாடாளுமன்றத்தில் மொத்த இடங்கள் 225.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+