அமெரிக்க ஆங்கில டிக்ஷனரியில் இந்திய மொழி வார்த்தைகள்
டெல்லி:
அமெரிக்க நாட்டின் ஆங்கில டிக்ஷனரியில் இந்திய வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. இனி அவை அமெரிக்கஆங்கில வார்த்தைகளாகக் கருதப்படும்.
இந்தியாவில் காலனி ஆதிக்கத்தை 400 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்த கிழக்கிந்தியக் கம்பெனிமுதன்முதலாக இந்தியாவில் ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தியது.
அதன்பிறகு இந்தியாவில் தமிழ், ஹிந்தி, சமஸ்கிருதம், பெங்காலி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உள்ள சிலவார்த்தைகள் ஆங்கில மொழியில் சேர்க்கப்பட்டன.
படிப்படியாக இப்படி நடந்த வார்த்தைத் "திருட்டு" இப்போது அந்த வார்த்தைகளையே தனதாக சொந்தம்கொண்டாடத் தொடங்கிவிட்டது ஆங்கிலம்.
அதன்படிதான் அமெரிக்காவின் சமீபத்திய ஆங்கில டிக்ஷனரியில் பல இந்திய வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.
நமஸ்தே, நான், ரோட்டி, பூரி உள்ளிட்ட பல இந்திய மொழி வார்த்தைகள் ஆங்கில வார்த்தைகளாக மாறிஅமெரிக்க டிக்ஷனரியில் இடம் பெற்றுள்ளன. சாது, சமாதி, சுவாமி, ஆஷ்ரம், ஹரிஜன், தமாஷா, தோத்தி, குர்தா,தர்ணா, தால் போன்ற வார்த்தைகளும் அதில் இடம் பெற்றுள்ளன.
அமெரிக்க ஆங்கில டிக்ஷனரியில் உலக நாடுகளில் வழக்கத்தில் உள்ள மொழிகளில் இருந்து சுமார் 7000வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications