ரூ.15 கோடி மதிப்பிலான 3 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்.. சிவகங்கையில் அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கையில் இருந்து மலேசியாவுக்கு கடத்த திட்டமிட்டிருந்த ரூ.15 கோடி மதிப்பிலான 3 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மெத்தபெட்டமைனை பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை நகர் போலீசார் நேற்று சிவகங்கை இந்திரா நகர் ரயில்வே கேட் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இளையான்குடியைச் சேர்ந்த ரசூல்தீன் (35), சென்னை திருவல்லிக்கேணி அபுசாகுபர் சாதிக் (26), திருச்சியைச் சேர்ந்த முகமது ஹபீஸ் (28), முகமதுரபீக் (எ) பாபு (30) ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

sivagangai drugs police

அவர்களிடம் நடத்திய சோதனையில் 3 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இருந்தது. அதனையும் 3 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்​களிடம் விசா​ரணை நடத்தியதில், மெத்​தம்பெட்​டமைனை மலேசியா நாட்​டுக்கு கடத்​த​ இருந்​தது தெரியவந்​தது.

அவர்​களிடம் இருந்து பறி​முதல் செய்த செல்​போன்​களை ஆய்வு செய்​த​தில் அவர்​கள் பல ஆண்​டு​களாக போதைப் பொருட்​கள் கடத்​தலில் குருவி​களாக செயல்​பட்டு வந்​ததும், தமிழகம் முழு​வதும் பலருடன் தொடர்​பில் இருந்​ததும் தெரியவந்​துள்​ளது. இதையடுத்​து, அவர்​களு​டன் இணைந்து போதைப்​பொருட்​கள் கடத்​தலில் ஈடு​பட்டு வந்​தவர்​கள் குறித்து போலீ​சார் தீவிர​மாக விசா​ரித்து வரு​கின்​றனர்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி சிவபிரசாத் கூறுகையில், "இந்த போதைப்பொருளை மலேசியாவுக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்த போதைப்பொருளை சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மலோசியாவிற்கு கடத்த திட்டமிட்டிருந்த நிலையில் விமானம் மூலம் கடத்தும் திட்டம் தோல்வியடைந்தது.

இதையடுத்து தமிழ்நாட்டிலேயே போதைப்பொருளை பங்கிட்டு பிரித்து விற்பனை செய்து பணமாக மாற்றத் திட்டமிட்டுள்ளனர். அதை பங்கிட்டு கொள்வதில் கும்பலுக்குள் ஏற்பட்ட தகராறால், போலீசாருக்கு தகவல் வந்தது. இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.15 கோடி. போதைப்பொருள் எங்கிருந்து வந்தது, யாருக்கு அனுப்பப்பட இருந்தது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+