பொது மக்கள் முற்றுகையில் சிக்கிய அமைச்சர்கள்
பரங்கிப்பேட்டை:
தமிழக அமைச்சர்கள் சென்ற காரை பொது மக்கள் மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். கடலூர் மாவட்டம்பரங்கிப்பேட்டை அருகே இச் சம்பவம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்தில் வேளங்கிப்பட்டு, மஞ்சக்குழி, தச்சன்காடு, சிண்ணாடிக்குழி பகுதிகளில் தமிழக அரசால்கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடை, சத்துணவு மையம், ஊராட்சி மன்றக் கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழாநடைபெற்றது.
இவ் விழாக்களில் மாநில கதர் வாரியத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் மற்றும் தொழில் துறைஅமைச்சர் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தச்சக்காடு கிராமத்தில் நியாய விலைக் கடையைத் திறந்து வைத்து விட்டு வேளங்கிப்பட்டு கிராமத்தில் நியாயவிலைக் கடையைத் திற்க அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அந்தியூர் செல்வராஜ், கலெக்டர் சந்தீப்சக்சேனா ஆகிய 3 பேரும் ஒரே காரில் சென்றனர்.
வேளங்கிப்பட்டு கிராமத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென்று காரைமறித்தனர். காரிலிருந்து இறங்கிய அமைச்சர்களின் தங்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தரும்படிகோரினர்.
தங்கள் பகுதியில் குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி ஏதும் இல்லை என்று அவர்கள் கூறினர்.பரங்கிப்பேட்டை பஞ்சாயத்து அலுலகத்தில் பலமுறை மனுக்கள் எழுதிக் கொடுத்தும் நடவடிக்கைஎடுக்கப்படவில்லை என்று அவர்கள் புகார் கூறினர்.
அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர்களுக்கு அமைச்சர்கள்இருவரும் உறுதி அளித்தனர். இதையடுத்து தங்களது முற்றுகையை பெண்கள் கைவிட்டனர்.












Click it and Unblock the Notifications