ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தில் அரசியல் பின்னணி - ராமகோபாலன்

Subscribe to Oneindia Tamil

திசையன்விளை:

கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்றசம்பவத்தில் அரசியல் பின்னணி இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக இந்துமுன்னணி அமைப்பாளர் இராம கோபாலன் தெரிவித்தார்.

திசையன்விளையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

ராஜ்குமார் உள்பட 4 பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்று 20நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. கடத்தப்பட்டவர்களை மீட்க தமிழக, கர்நாடகஅரசுகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இக் கடத்தல் சம்பவத்தில் அரசியல் பின்னணி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன்.எத்தனையோ தகவல் தொடர்பு சாதனங்கள் வந்துவிட்ட நிலையில், வீரப்பன்இருப்பிடத்தை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுவெட்கப்படவேண்டிய விஷயம்.

வீரப்பன் கோரிக்கைகளுக்கு இரு மாநில அரசுகளும் பணிந்து விடக்கூடாது. எப்போதுகடத்தல்காரர்களுக்கு மரியாதை கிடைக்கிறதோ அப்போது அது வியாபாரம்ஆகிவிடும்.

சிறுபான்மையினர் உணர்வுகளைப் பற்றி அதிகம் கவலைப்படும் மத்திய, மாநிலஅரசுகளும் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைப் பற்றி கவலைப்படுவதாகத்தெரியவில்லை.

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்குத் தடை விதிக்கப்படுகிறது.திருவல்லிக்கேணியில் முஸ்லிம்கள் அதிகம் வசிப்பதாகக் கூறி அங்கு ஊர்வலம் நடத்ததமிழக அரசு தடை விதித்தது. ஆனால், அது தவறு.

ஊர்வலத்துக்குத் தடை விதிப்பது அராஜகச் செயலாகும். இந்த ஆண்டு விநாயகர்ஊர்வலத்துக்குத் தடை விதித்தால் தடையை மீறு ஊர்வலம் செல்வோம் என்றார்ராமகோபாலன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+