சமனில் முடிந்தது முதல் உள்அரங்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர்

Subscribe to Oneindia Tamil

மெல்பெர்ன்:

ஆஸ்திரேலியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையேயான உலகின் முதல் உள்அரங்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் சமனில் முடிந்தது.

3 ஆட்டங்கள் கொண்ட இத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றிபெற்றன. மெல்பெர்னில் இத் தொடர் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 8 ரன்கள்வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது.

முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. லான்ஸ் குளூசனர் அதிகபட்சமாக 49ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணியில் மெக்ரா, பிரெட் லீ இருவரும் தலா 3 விக்கெட்டுகளைவீழ்த்தினர்.

ஓவர்களை மெதுவாக வீசியதால் ஆஸ்திரேலியாவுக்கு இரு ஓவர்கள்குறைக்கப்பட்டன. இதையடுத்து 48 ஓவரில் 207 ரன்கள் எடுக்கவேண்டும் என்று அந்தஅணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், 48 ஓவர் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களேயேஎடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அணியில் அதிகபட்சமாகஆடம் கில்கிறைஸ்ட் 63 ரன்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்க அணியில் நிக்கி போயே, போலக் இருவரும் தலா இருவிக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தின் சிறந்த ஆட்டக்காரர் மற்றும் தொடரின் சிறந்த ஆட்டக்காரர்விருதுகள் நிக்கி போயேவுக்கு வழங்கப்பட்டன.

இத் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரண்டாவதுஆட்டம் டையில் முடிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+