கடலில் மூழ்கிய ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலில் இருப்பவர்களை மீட்கும் முயற்சி தீவிரம்
மாஸ்கோ:
ஆர்க்டிக் கடல் பகுதியில் மூழ்கிய ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலுக்குள் இருப்பவர்களைமீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மீட்பு முயற்சியில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினருக்கு உதவியாக பிரிட்டன் மற்றும்நார்வே நாட்டு மீட்புக் குழுக்கள சம்பவ இடத்தை நோக்கி விரைந்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கள்கிழமை காலைக்குள் அவை சம்பவ இடத்தைசென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்க்டிக் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த அணு சக்தியால் இயங்கும் ரஷ்யகடற்படையைச் சேர்ந்த குர்ஸ்க் என்ற நீர் மூழ்கிக் கப்பல் திடீரென்று கடலில் மூழ்கியது.கப்பலுக்குள் 118 பேர் உள்ளனர்.
இரு நாட்டு மீட்புக் குழுக்களும் சம்பவ இடத்தை அடைந்த பிறகு கப்பலுக்குள்இருப்பவர்களை மீட்கும் முதற்கட்டப் பணிகள் திங்கள்கிழமை காலைதொடங்கப்படும் என்று தெரிகிறது.
பிரிட்டன், நார்வே நாட்டு மீட்புக் குழுக்கள் மீட்புப் பணிக்குத் தேவையான அனைத்துகருவிகள் மற்றும் உபகரணங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைகின்றன. கடலுக்குள்நீந்தி செல்லும் வீரர்களும் உடன் செல்கின்றனர்.
இதற்கிடையே, கப்பலுக்குள் ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருகிறது என்றும்,கப்பலுக்குள் இருப்பவர்களை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவுஎன்றும் ரஷ்ய கடற்படையினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications