மேல்நிலைப் பள்ளிகளில் 100 தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமனம்
சென்னை:
தமிழகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 100 விவசாயப் பட்டதாரிகள், தொழிற்கல்வி ஆசிரியர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
விவசாயப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தின் கீழ் இந்தநியமனங்களை மேற்கொள்ள தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
இந்த தொழிற் கல்வி ஆசிரியர்கள் நியமனம் இந்த ஆண்டு முதல்அமல்படுத்தப்படவுள்ளது. அதற்கான நடைமுறைப் பணிகளை ஆசிரியர் தேர்வுவாரியம் மேற்கொண்டுள்ளது.
இந்த 100 பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான மனுதாரர்களைப் பரிந்துரைசெய்யும்படி தமிழகத்தில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்புஅலுவலகங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பெண் பட்டதாரிகளில் 1989,செப்டம்பர் 13-ம் தேதிக்குள் பதிவு செய்துள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவர்களும், 1992, ஜூலை 10-ம் தேதிக்குள் பதிவு செய்துள்ள மிகவும்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்களும், 1988, ஆகஸ்ட் 1-ம்தேதிக்குள் பதிவு செய்துள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும், பகிரங்கப்பிரிவில் 1989ஸ மே 19-ம் தேதிக்குள் பதிவு செய்துள்ளவர்களின் பெயர்கள் இந்தநியமனத்துக்குப் பரிந்துரை செய்யப்படவுள்ளன.
பொதுப் பிரிவில் 1995, மார்ச் 6-ம் தேதிக்குள் பதிவு செய்துள்ள பழங்குடியினர்மற்றும் மலைவாழ் வகுப்பைச் சேர்ந்தவர்கள், 1990, ஜூலை 9-ம் தேதிக்குள் பதிவுசெய்துள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பினர், 1990, செப்டம்பர் 25-ம் தேதிக்குள் பதிவுசெய்துள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 1988, டிசம்பர் 2-ம் தேதிக்குள்பதிவு செய்துள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், பகிரங்கப் பிரிவில்1989, ஜூலை 4-ம் தேதிக்குள் பதிவு செய்தவர்களுடைய பெயர்களும்பரிசீலிக்கப்படவுள்ளன.
பதிவு செய்துள்ள தகுதியான நபர்கள், சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்புஅலுவலகங்களைத் தொடர்பு கொண்டு தங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படுகிறதாஎன்பதை உறுதி செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்புஅலுவலகத்தை நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டுதகவல்களைப் பெறலாம் என்று அந்த அலுவலத்தின் உதவி இயக்குநர் அனுசூயாசெல்வி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications