கிளின்டனை தர்மசங்டத்துக்குள்ளாக்கிய பெண்
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் எதிரே பல பேர் முன்னிலையில் ஒரு பெண் தனதுமேலாடையைக் கழற்றி பில் கிளின்டனை தர்மசங்கடத்துக்குள்ளாக்கினார்.
நியுயார்க்கில் உள்ள லேக் பிளாஸிட் எந்ற இடத்துக்கு வந்த அமெரிக்க அதிபர்அங்கிருந்து ஒரு கடையில் ஐஸ்கிரீம் வாங்க வந்தார். அப்போது அங்கு வந்த ஒருபெண் தனது மேலாடையில் (டி சர்ட்) கையெழுத்து போடும்படி கேட்டுக் கொண்டார்.
கிளின்டனும் மகிழ்ச்சியாக அந்த பெண்ணின் ஆசையை நிறைவேற்ற அவளதுமேலாடையில் கையெழுத்திட்டார். இந் நிகழ்ச்சியை அங்கு வந்திருந்த மக்கள்ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
கிளின்டன் கையெழுத்து போட்ட மறுநிமிடம் அனைவரும் ஆச்சரியமும்,வெட்கமும்படி கிளின்டன் முன்னிலையில் மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோதேஅந்த மேலாடையை அப் பெண் கழற்றினாள். இதனால், கிளின்டன்தர்மசங்கடத்துக்குள்ளாகி வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.
உடனே அங்கு பாதுகாப்பு இருந்த போலீஸார் அப் பெண்ணை அங்கிருந்துஅப்புறப்படுத்தினர். பிடிபட்ட அந்த பெண், ஏன் அப்படிச் செய்தார் என்று போலீஸார்விசாரித்து வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications