அடுத்த பிறவியில் ஆணாகப் பிறக்க விரும்பும் ஈரான் பெண்கள்

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்:

ஈரானில் வசிக்கும் பெண்கள் அடுத்த பிறப்பில் தாங்கள்ஆண்களாகப் பிறக்கவேண்டும் என விரும்புகின்றனர்.

சமூகவியல் பேராசிரியர் ஒருவர் சமீபத்தில் எடுத்த கருத்துக் கணிப்பில் 53 சதவீதபெண்கள் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மொகம்மது கதாமி, பெண்கள் மீதானகட்டுப்பாட்டுகளைத் தளர்த்தியுள்ளார்.

இருப்பினும் பெண் என்ற ஒரே காரணத்தால் அதிக பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்று பெண்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில் பெண்ணாக மாறிய ஒரு ஆண், பெண் வாழ்க்கை மிகவும் கடினமாகஇருப்பதால் மீண்டும் ஆணாக முயற்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.ஈரானில் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது.

ஈரானில் பெண்கள் அணியும் உடைகளில் சில வரைமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தங்களை விட வயதில் மூத்தவர்கள் முன்போ அல்லது புதியவர்களுக்கு முன்போபெண்கள் வர நேர்ந்தால் அவர்கள் தங்களது உடலையும், தலைமுடியையும் மூடிவரவேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.

ஆனால் அத்தகைய கட்டுப்பாடுகள் ஏதும் ஆண்களுக்கு இல்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+