கோவை சிறையில் போலீஸார் அதிரடி சோதனை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை சிறையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் கைதிகளுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் சில ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. எனவே, தற்போது சிறைகளில் போலீசார் திடீர் சோதனைமேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி கோவை சிறையில் டி.ஐ.ஜி., எஸ்றா உத்தரவின் பேரில் போலீசார் திடீர் சோதனை மேற் கொண்டனர்.இதில் ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
கோவை சிறையில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதால் கண்காணிப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications