தைவானில் இரண்டு நாளில் 11 நிலநடுக்கங்கள்
Subscribe to Oneindia Tamil
தைபே:
தைவான் நாட்டில் கடந்த இரு நாட்களில் 11 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன என்றுஅந் நாட்டு நிலநடுக்கப் பதிவு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் உயிர்ச் சேதம் பற்றியதகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.46 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.திங்கள்கிழமை காலை வரை 11 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இதில் ரிச்டெர் அளவு கோலில் 4.8 என்று பதிவான நிலநடுக்கம்தான் சற்று பெரிது.நிலநடுக்கங்கள் எல்லாம் தைவானின் தெற்குப் பகுதியில்தான் ஏற்பட்டன.
மத்திய தைவானில் கடந்த ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில்2,400 பேர் இறந்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications