சென்னையில் ரங்கராஜன் குமாரமங்கலம் ரத்தம் பரிசோதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கோமா நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மத்திய மின்துறை அமைச்சர்ரங்கராஜன் குமாரமங்கலத்தின் ரத்தம் சென்னையில் பரிசோதிக்கப்பட உள்ளது.

அமைச்சரின் ரத்த மாதிரியுடன் மருத்துவர்கள் சென்னை வந்துள்ளனர்.

டெல்லியில் தனது வீட்டில் இருந்தபோது திடீரென்று உடல் நிலை பாதிக்கப்பட்டரங்கராஜன் குமாரங்கலம், டெல்லி அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கோமா நிலையில் உள்ள இவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து கவலைக்கிடமான முறையில் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் உடல்நிலைஇருந்தாலும் திங்கள்கிழமை அவரது ரத்த ஓட்டத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது.

இருப்பினும் அவர் அபாயகட்டத்தை இன்னும் தாண்டவில்லை என்று அவருக்குசிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, அவரது ரத்தத்தை முதலில் பரிசோதித்தபோது ரத்தத்தில் எலியினால்பரவக்கூடிய கிருமிகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரது ரத்தத்தை மேலும் பரிசோதிப்பதற்காக ரத்த மாதிரியுடன் டெல்லிமருத்துவர்கள் குழு சென்னை வந்துள்ளது. பரிசோதனைக்குப் பிறகு ரத்தத்தில்கிருமிகள் எப்படி வந்தது என்பது கண்டறியப்படும்.

இந் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி தினமும் காலையில்மருத்துவமனைக்கு வந்து ரங்கராஜன் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம்கேட்டறிந்து வருகிறார்.

டெல்லியில் தங்கியுள்ள தமிழக பாஜக தலைவர் கிருபாநிதி, நாடாளுமன்ற உறுப்பினர்பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் மருத்துவமனையில் தங்கியிருந்து அமைச்சரின்உடல் நிலை பற்றி அறிந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+