இந்தோனேஷிய அமைச்சரவை கூண்டோடு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
ஜகார்தா:
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்தோனேஷியா அமைச்சரவை புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
இப்போதுள்ள 35 பேர் கொண்ட அமைச்சரவை நீக்கப்பட்டு தற்போது புதிதாக 25 பேர் கொண்ட அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை அரசியல் அமைச்சராக சுசிலோ பாம்பாங் யுதோயோனோ நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார அமைச்சர் பொருளாதார நிபுணர் ரிஸால்ராம்லியும், நிதி அமைச்சராக வங்கியாளர் பிராப்டோ சுஹார்ட்ஜோவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அட்டர்னி ஜெனரல் பதவி மார்ஸுகி தாருஸ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சராக மாஃபட் மொகம்மது, சுரங்கம் மற்றும்எரிசக்தித் துறை அமைச்சராக புர்னோமோ யுஸ்ஜியான்டோரோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய அமைச்சரவைப் பட்டியலை அமைச்சரவைச் செயலர் மார்சிலம் சிமான் ஜுன்டாக் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications