27-ல் அமெரிக்கா போகிறார் பங்காரு அடிகளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் சென்னை நகருக்கு அருகே அமைந்துள்ளது மேல்மருவத்தூர். அங்குஅமைந்துள்ளதுதான் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம்.

தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டியதை அருளி வரும் அருட்கடலானஆதிபராசக்தி ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் ஏராளம், ஏராளம். அந்த ஆலயத்தின் குருபங்காரு அடிகளாவார். பக்தர்களால் பக்தியுடன் அம்மா என அழைக்கப்படுகிறார்.

அமெரிக்காவில் வாழும் பக்தர்கள் அவரை அமெரிக்காவுக்கு வரும்படி பல வருடமாகஅழைத்து வந்தார்கள். தற்போது அடிகளார் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம்செய்வதாக உள்ளார். அவரது 60-வது பிறந்த நாளை பக்தர்கள் அங்கே கொண்டாடஉள்ளனர்.

பங்காரு அடிகளாரின் அமெரிக்க ஆன்மிக சுற்றுப்பயண விவரம் வருமாறு:

பங்காரு அடிகளாரின் அமெரிக்க சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல்:

ஆகஸ்ட் 27: இரவு 7.40க்கு நியூயார்க்கில் உள்ள ஜான்.எப்.கென்னடி விமானநிலையத்திற்கு வருகிறார்.

ஆகஸ்ட் 28, 29: நியூ ஜெர்சியில் ஆன்மிக சுற்றுப்பயணம்.

ஆகஸ்ட்30, செப்டம்பர் 1: நியூயார்க்கில் ஆன்மிக சுற்றுப்பயணம்.

செப்டம்பர் 1: அடிகளாரின் 60-வது பிறந்த தின விழா கொண்டாட்டங்கள்நியூயார்க்கில் உள்ள வழிபாட்டுத் தலத்தில் நடைபெறும்.

செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 6 வரை: அடிகளார் பிலடெல்பியாவில் ஆன்மிகசுற்றுலா செய்கிறார்.

செப்டம்பர் 2: பிலடெல்பியா தமிழ்ச்சங்கத்தில் அடிகளாரை கவுரவிக்கும் விழாநடைபெறும்.

செப்டம்பர் 3: பிலடெல்பியாவில் உள்ள செஸ்டர் ஸ்பிரிங்சில் உலக அமைதிக்கானயாகம் நடைபெறும். நேரம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை.

காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணிக்குள் வழிபாட்டுமையத்தை அடிகளார்துவக்கி வைக்கிறார்.

மதிய உணவு நண்பகல் 12 மணிமுதல் மதியம் 1.30 வரை.

ஆன்மிகக் கூட்டம் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

இக் கூட்டத்தில் பேசப்படும் தலைப்புகள்:

1.இறைவழிபாட்டில் பெண்கள்.

2.சேவை மூலம் இறைவழிபாடு.

3.இறைவழிபாட்டிற்கான வழிகாட்டி. (ஸ்பிரிச்சுவல் குரு)

4.இறைவழிபாட்டில் அடிகளாரின் வழி. (இந் நிகழ்ச்சியின் போது டாக்டர்.ஆனந்த்சங்கரின் இசை நிகழ்ச்சி நடை பெறும் அவரது பாடல்கள் அடங்கிய சி.டி.யும்வெளியிடப்படும்.)

மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பாலயோகியுடன் சந்திப்பு நடைபெறும்.

இதைத் தொடர்ந்து இரவு விருந்து நடைபெறும். அச் சமயம் தமிழ் திரைப்படஇசையமைப்பாளர் தேவாவுடன் டாக்டர். ஆனந்த் சங்கரின் மெல்லிசை நிகழ்ச்சிநடைபெறும்.

  • செப்டம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் அடிகளார் பக்தர்கள் வீடுகளுக்கு விஜயம் செய்கிறார்.
  • செப்டம்பர் 6-ம் தேதி பிலல்ெபியாவில், ஸ்டிரவுட்ஸ்பர்க்கில் உள்ள ஆர்ஷா வித்யா குருகுலத்திற்கு விஜயம் செய்கிறார்.
  • செப்டம்பர் 7-ம் தேதி நயாகராவுக்கு ஆன்மிக விஜயம்.
  • செப்டம்பர் 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை மேரிலாண்ட், விர்ஜீனியா மற்றும்
  • வாஷிங்டன் டி.சி.க்கு விஜயம் செய்கிறார்.
  • செப்டம்பர் 9-ம் தேதி சிவா விஷ்ணு கோவில் விழாவில் கலந்து கொள்கிறார்.
  • செப்டம்பர் 10-ம் தேதி முருகன் கோவில் விழாவில் கலந்து கொள்கிறார்.
  • செப்டம்பர் 12-ம தேதி முதல் 16-ம் தேதி வரை ப்ளோரிடாவில் ஆன்மிக சுற்றுலா.
  • செப்டம்பர் 17-ம் தேதி பிலடெல்பியா, செஸ்டர்ஸ்பிரிங்கில் உள்ள சக்கி பீடத்தில் அடிகளார் அருள் மொழியும், அருள் வாக்கும் வழங்குகிறார்.
  • செப்டம்பர் 18-ம் தேதி நியூயார்க்கில் உள்ள ஜான் எப் கென்னடி விமான

  • நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னை நகருக்கு கிளம்புகிறார்.
  • செப்டம்பர் 20-ம் தேதி காலை 5 மணிக்கு சென்னை வருகிறார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+