புதிய மாடல்களில் வருகிறது மாட்டிஸ் கார்
டெல்லி:பழைய மாடல் மாட்டிஸ் கார் உற்பத்தியை நிறுத்திவிட்டு புதிய மாடல்களில்கார்கள் தயாரிக்க தேவூ மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சிறிய கார்கள் வரிசையில் ஹூண்டாய் சான்ட்ரோ, மாருதி ஸென் ஆகிய கார்களுக்குஇணையாக விற்பனையில் முன்னிலையில் இருப்பது மாட்டிஸ் கார்கள். இக் கார்களைதேவூ மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
எஸ்.இ., எஸ்.பி. என்ற 2 மாடல்களில் மாட்டிஸ் கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.இப்போது இந்த இரு மாடல்களில் கார்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டு புதிதாகஎஸ்.ஜி., எஸ்.ஏ. என்ற இரு மாடலில் மாட்டிஸ் கார்களைத் தயாரிக்க முடிவுசெய்துள்ளது.
எஸ்.ஜி. மாடல் கார் ரூ.3.43 லட்சமாகவும். எஸ்.ஏ. மாடல் கார் ரூ. 3.95 லட்சமாகவும்விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்களில் பவர் ஸ்டீரிங் மற்றும் திருட்டுத்தடுப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தேவூ மோட்டார் நிறுவனத்தின் தாய் நிறுவனத்தின் மறுகட்டமைப்புப் பணிகள் முடியும்வரை நுபிரா-11 என்ற சொகுசுக் கார் தயாரிக்கும் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுஎன்று தேவூ மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தில் தலைவர் ஷிவ் கோபால் அவஸ்த்தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications