காஷ்மீரில் 9 தீவிரவாதிகள் உள்பட 11 பேர் சாவு
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் பகுதிகளில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 6ஊடுருவல்காரர்கள், இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 5 ஊடுருவல்காரர்களும், ஒரு ராணுவ வீரரும்இறந்தனர்.
இதே போல் தோடா மாவட்டத்தில் உள்ள கர்னால் கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் சிறப்பு அதிரடிப் படைபோலீஸார் நடத்திய தாக்குதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். அவர் பெயர் முகமது காட்வர். இவர் ஹர்கத்உல் ஜிஹாத் இஸ்லாமி தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர். தாக்குதல் நடந்த போது ராணுவ வீரர் சஞ்சய் தாகூர்என்பவரும் உயிரிழந்தார்.
பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த இன்னொரு தாக்குதல் சம்பவத்தில் ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாத அமைப்பைச்சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அப்பகுதியிலிருந்து தீவிரவாதிகள் விட்டுச்சென்ற ஏ.கே.56 ரக துப்பாக்கிகள் இரண்டு, 200 சுற்றுஉபயோகப்படுத்தப்படும் வெடிப்பொருட்கள், 7 கையெறி வெடிகுண்டுகள், தீவிரவாதிகளின் துண்டுப் பிரசுரங்கள்ஆகியவை கைப்பற்றப்பட்டன.
மேலும், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா காதி பகுதியில் நடந்த தாக்குதலில் ஊடுருவல்காரர் ஒருவர்கொல்லப்பட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications