ரஜினி கோரிக்கையை ஏற்ற ராஜ்குமார்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
கர்நாடக திரைப்படத் துறையினர் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தத்தை கைவிட்டு விட்டு உடனடியாக தங்களது வழக்கமான பணிகளைத் தொடங்கவேண்டும் என்று வீரப்பன் பிடியில் உள்ள நடிகர் ராஜ்குமார் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக கர்நாடகத் திரைப்படத் துறையினருக்கு நடிகர் ராஜ்குமார் கோரிக்கை விடுக்க வேண்டும் என்று நடிகர் ரஜினி காந்த், ராஜ்குமாருக்குஅனுப்பியிருந்த கேசட்டில் கோரிக்கை விடுத்திருந்தார்.
வீரப்பனைச் சந்திக்க இரண்டாவது முறையாக காட்டுக்குச் சென்றிருந்த நக்கீரன் கோபால் இந்த கேசட்டை ராஜ்குமாருக்குப் போட்டுக் காட்டினார்.இதையடுத்து ரஜினி காந்த் வேண்டுகோளை ஏற்று, கர்நாடகத் திரைப்படத் துறையினர் உடனடியாக தங்களது பணிகளைத் தொடங்க வேண்டும் என்று ராஜ்குமார்கேட்டுக் கொண்டார்.
கோபால் தன்னுடன் கொண்டு வந்திருந்த வீடியோ கேசட்டில் இந்த தகவல்கள் அடங்கியிருந்தன.












Click it and Unblock the Notifications