10 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை

Subscribe to Oneindia Tamil

ஜம்மு:

ஜம்மு - காஷ்மீரின் எல்லைப் பகுதியான பூஞ்ச் பகுதியில் முகாமிட்டுள்ள இந்தியராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குல் நடத்தினர். இந்திய ராணுவவீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 10 பாகிஸ்தான் வீரர்கள் செத்தனர்.

இந்திய - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறி இந்திய எல்லைக்குள்30 முதல் 40 பாகிஸ்தான் வீரர்கள் முயன்றனர். அவர்கள் ஊடுறுவுவதற்குத் தடைஏதுமின்றி இருப்பதற்காக அவர்களுக்கு உதவியாக பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்,இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து இந்தியத் தரப்பு வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதில்,

ஊடுறுவ முயன்ற 10 பாகிஸ்தானிய வீரர்கள் கொல்லப்பட்டனர். பல வீரர்கள்காயமடைந்தனர். சிலர் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் தங்களுடன் வந்த இரு சகராணுவ வீரர்களின் உடல்களை இந்திய எல்லைக்குளேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இன்னும் சண்டை தொடர்ந்து வருகிறது. இந்தியத் தரப்பில் ஒரு ராணுவ வீரர்உயிரிழந்ததாக ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இதற்கிடையே, வியாழக்கிழமை ஸ்ரீநகர் அருகே உள்ள ஸ்ரீநகர் - சோபூர் சாலையில்போத்தா - சங்ரம் இடத்தில் கைவண்டி ஒன்றில் வைத்திருந்த குண்டு தீவிரவாதிகளால்வெடிக்கச் செய்யப்பட்டதில் 5 ராணுவ வீரர்களும், ஒரு பெண்ணும் காயமடைந்தனர்.

இந்த வெடிகுண்டு சாலையில் செல்லும் ராணுவ வாகனங்களை குறிவைத்துஇருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் காரில் வந்துகொண்டிருந்த பெண்ஒருவர் இந்தத் தாக்குதலில் காயமடைந்தார். இதில், சில ராணுவ வாகனங்களும்சேதமடைந்தன. தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும்பொறுப்பேற்கவில்லை.

ஜம்மு- காஷ்மீரில் புதன் கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை வரையில் 14தீவிரவாதிகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+