அதிரடிப்படை கொடுமை ... சதாசிவம் கமிஷன் விசாரணை செப். 11ல் துவக்கம்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

வீரப்பனைப் பிடிக்க நியமிக்கப்பட்ட அதிரடிப் படை வீரர்களின் அடக்குமுறைகள் குறித்து விசாரிக்கநியமிக்கப்பட்ட சதாசிவம் விசாரணைக் கமிஷன், தனது விசாரணையை செப்டம்பர் மாதம் 11 ம் தேதிதொடங்குகிறது.

கோபி அருகேயுள்ள குளத்தூரில் விசாரணை தொடங்கும். சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடக் காட்டிற்குச் சென்றதமிழ்நாடு மற்றும் கர்நாடக அதிரடிப் படையினர் கிராம மக்களைக் கொடுமைப் படுத்தி பலாத்காரம் செய்ததுதொடர்பாக வந்த புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்டது சதாசிவம் விசாரணைக் கமிஷன்.

தற்போது சந்தனக் கடத்தல் வீரப்பன், கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்திச் சென்று பல நாட்களாகி விட்டது. அரசுவீரப்பன் விடுத்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து அரசு தூதர் நக்கீரன் கோபால் மூலம் தகவலை அனுப்பியது.

வீரப்பன் அனுப்பிய கோரிக்கைகளில் ஒன்று அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்பது தான். இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த அரசு, கடந்த 5 ஆண்டுகளாக தமிழகஅதிரடிப்படையும், கர்நாடக அதிரடிப்படையினரும் கிராம மக்களுக்கு இழைத்த கொடுமை குறித்து விசாரணைசெய்ய சதாசிவம் தலைமையிலான கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது.

இந்த கமிட்டியில் நீதிபதி சதாசிவம் மற்றும் நரசிம்மன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்குமுன் நடந்த இந்த சம்பவம் குறித்து இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இந்த கமிட்டி கொளத்தூர்மற்றும் கோபியில் விசாரணை மேற்கொண்டது.

மார்ச் மாதம் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலையில் விசாரணை நடத்த இந்த குழு சென்றது. அந்தசமயத்தில் கர்நாடக நீதிமன்றத்தில், விசாரணை மேற்கொள்ளக் கூடாது எனக் கூறி, கர்நாடக போலீஸ் தரப்பில்வழக்குத் தொடர்ந்து தடை பெற்றனர்.

இதனால் மனித உரிமைக் கமிஷன் மேற்கொண்ட வழக்கு விசாரணை பாதியில் நின்று போனது. தற்போது வீரப்பன்விடுத்த கோரிக்கையையடுத்து, நீதிமன்றம் விதித்த தடை வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து அடுத்த கட்டவிசாரணை மேற்கொள்ள சதாசிவம் தலைமையிலான கமிட்டி மீண்டும் கொளத்தூரில் விசாரணையைத்துவங்குகிறது.

மாதேஸ்வரன் மலையில் விசாரணை தொடங்கினால், கர்நாடகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என போலீஸ்அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அவ்வாறு பிரச்னை ஏற்படும் பட்சத்தில், விசாரணையை நிறுத்திக்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விசாரணை மேற்கொள்வது பற்றிய ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடந்தது. இக் கூட்டத்தில்,மலைவாழ் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சங்கத் தலைவர் குணசேகரன், சாக்கோ டிரஸ்ட் தலைவர் மகபூப்பாட்சா, மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், மனித உரிமைக் கமிஷன் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதில், மனித உரிமைக் கமிஷனால் முன்பு விசாரிக்காமல் விடப்பட்ட புகார்களை விசாரிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. விசாரணை செப்டம்பர் 11ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு கொளத்தூரில் நடக்கும். இதன்பின் இக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+