இறுதிப் போட்டியில் தெ.ஆப்பிரிக்கா

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சிங்கப்பூர் சேலன்ச் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் விளையாட தென் ஆப்பிரிக்கா தகுதிபெற்றுள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நியுசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோற்கடித்தது. இறுதி ஆட்டத்துக்குஏற்கெனவே பாகிஸ்தான் தகுதி பெற்றுவிட்டது.

டாஸ் வென்ற நியுசிலாந்து முதலில் பேட் செய்தது. தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் நியுசிலாந்து வீரர்கள் ரன் குவிக்க மிகவும்சிரமப்பட்டனர்.

குறிப்பாக குளூசனர், போலக் ஆகியோரது பந்துவீச்சில் நியுசிலாந்து வீரர்களால் ரன் எடுக்க முடியவில்லை. இறுதியில் 47.4 ஓவரில் 158 ரன்களுக்குநியுசிலாந்து ஆட்டமிழந்தது.

நியுசிலாந்து அணியில் கிறிஸ் ஹாரிஸ் மட்டும் ஓரளவு நின்று ஆடி 42 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க அணியில் போலக் சிறப்பாகப் பந்து வீசி 3விக்கெட்டுகளை வீழ்த்தினார். காலிஸ், ஹால் இருவரும் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

159 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி தனது இன்னிங்ஸை தென் ஆப்பிரிக்கா தொடங்கியது. நியுசிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு அவ்வளவுசிறப்பாக இல்லாததால் கஷ்டப்படாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் ரன் குவித்தனர்.

34 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

துவக்க ஆட்டக்காரர் கிர்ஸ்டன் 75 ரன்கள் குவித்தார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் ஹால் 46 ரன்கள் எடுத்தார். ஆட்ட நாயகராக போலக்தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை தென் ஆப்பிரிக்கா சந்திக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+