ஒலிம்பிக் செல்லும் இந்திய வீரர், வீராங்கனைகள்
கே: எனக்கு பொது மன்னிப்பு வேண்டாம். நான் சரண் அடையவும் மாட்டேன் என்று கூறும் வீரப்பன் பற்றி தங்கள் கருத்து என்ன?
ப: பொதுமன்னிப்பு வேண்டாம் என்று அவன் கூறுவது, பொது மக்கள் பார்வைக்கு. அரசு பார்வைக்கு என்ன கூறியிருக்கிறான் என்பதுதான் முக்கியம்என்பதால், மக்களுக்கு அது தெரிவிக்கப்பட மாட்டாது.
கே: சந்தனக் கடத்தல் வீரப்பனின் தமிழ் மொழிப் பற்று பற்றி தங்கள் கருத்து என்ன?
ப: நூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களைக் கொன்றும் கூட, தீர்ந்து போகாத இந்த தமிழ்ப் பற்று முதல்வரின் பாராட்டுக்குரியதுதான் சந்தேகமில்லை.
கே: காலத்தின் கட்டாயத்தால், ஒரு வேளை தமிழகத்தின் அடுத்த முதல்வர் நீங்களானால்...?
ப: வீரப்பனிடம் பரிவு காட்டாத அரசு அமைய, வேறு வழியே உங்களுக்குத் தெரியவில்லையா?
கே; ஹிந்து கோயில்களைத் தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற இல.கணேசனின் கருத்து சரியா?
ப: அரசு துறையைச் சார்நதவர்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்க்கும் போது - இந்தக் கருத்து சரியானதுதான் என்ற எண்ணமே எனக்குஏற்படுகிறது.
கே: உங்களுக்குப் பிடித்த தானம்?
ப: சந்தானம். திருச்சியில் இருந்தார். நல்ல மனிதர்.பண்பாளர்.
கே: ஆசிர்யர்களுக்கு போனஸ், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - என அறிவிக்கிறாரே முதல்வர் கருணாநிதி, எதனால்?
ப: தேர்தல் வரப்போவது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். முதல்வருக்குத் தெரியாமற் போகுமா?ஓட்டுச் சாவடிகளில் பணிபுரியப் போவதுஅவர்கள் அல்லவா?
கே: நவம்பர் ஒன்றில் ஜார்கண்ட், சட்டீஸ்கர், உத்தராஞ்சல் போன்ற மூன்று புதிய மாநிலங்கள் உதயமாவது குறித்து...?
ப: நல்லதல்ல. மேலும் பல இடங்களில் இம்மாதிரி கோரிக்கைகள் எழ இது வழி செய்யும். குறுகிய நோக்கங்களும், ஜாதி, மொழி வேற்றுமைகளும்வளர இது பாதை அமைக்கும்.
கே: ராஜ்குமார் கடத்தப்பட்டது குறித்த ஜெயலலிதாவின் அறிக்கையில், அரசு தூதரும், பத்திரிக்கை ஆசிரியருமான நக்கீரன் கோபாலை, ஒருமையில்ஏசியுள்ளது நாகரீகமான செயலா?
ப: ஒருமையைப் பயன்படுத்தியது - அநாகரிகம்; ஏசியது - பண்பற்ற செயல். நக்கீரன் கோபால் அளித்த பதிலும் இவ்வகையானதே.
கே: ஜெயலலிதா ஆட்சியில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் நடவடிக்கைக்கும், கருணாநிதி ஆட்சியில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் நடவடிக்கைக்கும் என்னவித்தியாசம்...?
ப: அப்போது இவனிடம் பணிய வேண்டி இருக்கிறதே என்ற ஆதங்கம் அரசுக்கு இருந்தது, இப்போது அதுவும் இல்லை. மாறாக, பணிகிற வாய்ப்பு ஒருபெருமையாகக் கருதப்படுகிறது.
கே; கிரிக்கெட் வீரர்களிடம் வருமான வரிச் சோதனை மூலம், ரூபாய் நான்கு கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பற்றி...?
ப: பின் என்ன? நமது கிரிக்கெட் ஆட்டக்காரர்களை சோதனையிட்டால் ரன்கள் கிடைக்குமா என்ன? அது அவர்களிடம் கிடையாதே!
கே: நாட்டிலுள்ள பல பிரச்சனைகளை திசை திருப்ப, சந்தனக் கடத்தல் வீரப்பன் மூலம் கடத்தல் நாடகத்தை மூதல்வர் கருணாநிதி நடத்தி வருகிறார் -என்று ஜெயலலிதா கடும் புகார் கூறியுள்ளது பற்றி...?
ப: இது, கருணாநிதி நடத்துகிற நாடகம் அல்ல. வீரப்பர் தானே எழுதி, இயக்கி, நடித்து, தாயரித்து நடத்துகிற நாடகம் இது. அதில் விதூஷகர் வேடத்தைகருணாநிதிக்கு வீரப்பர் கொடுக்க, அவரும் அதை ஏற்றிருக்கிறார். அவ்வளவுதான்.
கே: கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமார் கன்னட நடிகராக இருப்பதால்தான், ரஜினிகாந்த் இவ்வளவு ஆதங்கப்பட்டு, முதல்வர் கருணாநிதியை எல்லாம் சந்தித்துமுயற்சி எடுத்து வருகிறார் என்று கூறும் மனிதர்களைப் பற்றி...?
ப: ரஜினிகாந்த் கன்னடக்காரரே அல்ல என்பது கூட தெரியாமல், அவர் மீதுள்ள துவேஷத்தைக் கொட்டித் தீர்த்துக் கொள்கிற இவர்கள் - தமிழர்கள்மீது, கன்னட வெறியர்கள் தங்கள் கோபத்தைக் காட்டி விடாமல் இருப்பதற்காக, ரஜினிகாந்த் முன்னெச்சரிக்கையாக செய்து வரும் முயற்சிகளைஅறியாதவர்கள்.
கே: அரசமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் தேவைப்படுகிறது. ஒரு தலைமுறையால் ஏற்படுத்தப்பட்ட அரசமைப்புச்சட்டம், அடுத்து வரும் தலைமுறையைஆளக்கூடாது; ஆள முடியாது - என்று சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் கூறியுள்ளதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
ப இல்லை. முந்தைய தலைமுறைகளைச் சார்ந்தவர்கள் கருத்து, இன்றைய தலைமுறையினருக்குப் பொருந்தாது - என்ற அவருடைய வாதப்படியே, அவருடையபழைய தலைமுறைக் கருத்து, இன்றைய புதிய தலைமுறையில் ஒத்து வராது.
கே: காஷ்மீர் தீவிரவாதிகளுடனான அமைதிப் பேச்சு வார்த்தையை, மத்திய அரசு தவறு விட்டு விட்டதாகக் கருதபவர்களைப் பற்றி...?
ப: அவசரப்பட்டு பேச்சு வார்த்தையில் இறங்கியதுதான் தவறு; அந்த அவசர முயற்சி முறிந்ததற்குக் காரணம் தீவிரவாதிகள், பாகிஸ்தான் உறவேதவிர, மத்திய அரசு அல்ல.
கே: இதுவரை ஆறு லட்சம் மக்களுக்காகப் பாடுபட்டேன். இப்போது ஆறு கோடி தமிழ் மக்களுக்காகப் பாடுபடுகிறேன்- என்று வீரப்பன்கூறுகிறானே?
ப: போதாது. 100 கோடி இந்தியர்களுக்காகப் பாடுபட வேண்டும் என்று தீர்மானித்து, டெல்லிக்குப் பக்கத்தில் ஏதாவது காட்டுக்குப் போய்விட்டால் நல்லது,












Click it and Unblock the Notifications