For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒலிம்பிக் செல்லும் இந்திய வீரர், வீராங்கனைகள்

By Staff
Google Oneindia Tamil News

கே: வீரப்பன் கடத்தல் விவகாரத்தின் பின்னனியில் தமிழக அரசு உள்ளது - என்றஅதிர்ச்சிகரமான தகவலை பால் தாக்கரே தந்துள்ளாரே?

ப: நான் இதை நம்பவில்லை. இது அதீதமான கற்பனை என்றே நினைக்கிறேன்.

கே: கேசட்டுக்கு மேல் கேசட் வீரப்பன் அனுப்புவது, அதை முதல்வர் கேட்டு விளக்கமளிப்பது... கேலிக் கூத்தாக இல்லை?

ப: நான் அனுப்பும் கேசட்டுகளை பல காப்பிகள் எடுத்து, விற்பனை செய்து அந்தப் பணத்தை எனக்கு அனுப்புங்கள் - என்று வீரப்பன் சொன்னால்அதையும் இவர்கள் செய்வார்கள். எல்லாம் தமிழ்ப் பற்றுதானே!

கே: காஷ்மீரில் தொடர்ந்து வன்முறைகள் நடப்பதற்கு, அம்மாநில நிர்வாகம் சரியில்லை என்று கூறலாமா?

ப: தயவு, தாட்சண்யம் இல்லாமல் நசுக்க வேண்டியதை, நாசுக்காக நடத்தி வந்ததுதான் அடிப்படைக் கோளாறு.

கே: பரபரப்பான அரசியல் சூழ்நிலைகள் இல்லாத பட்சத்தில், உங்களிடம் எப்படிப்பட்ட கேள்விகள் கேட்கலாம்?

ப: ஆன்மிகம், ஆட்டம் பாம்ப், ஆட்சிமுறை, அமெரிக்க அரசியல், ஆஃப்ரிக்க சமுதாய நிலை. அணுமின் உற்பத்தி - என்று எதையாவது கேளுங்களேன்.

நான் என்ன, எனக்குத் தெரியாது என்றா ஒப்புக் கொள்ளப் போகிறேன்? மரபணுவோ, மரபனுவோ - ஏதோ சொல்கிறார்களே - அது பற்றிவேண்டுமானாலும் கேளுங்கள். பதில் சொல்கிறேன்.

கே: என்னிடம் அதிகாரம் இருந்தால் இரண்டு நாட்களில் வீரப்பனைப் பிடிப்பேன்என்று சுப்ரமண்யம் சுவாமி கூறியிருப்பது பற்றி...?

ப: வீரப்பன் என்ன இட்லி கடையா நடத்துகிறான்?

கே: அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் ஜெயிப்பார் என்று நினைக்கிறீர்கள்?

ப: புஷ் ஜெயிப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

கே: ஜெயலலிதா ஆட்சியில் கட்டிய பாலங்கள் 53 தான். தி.மு.க. ஆட்சியில் 475 பாலங்கள் கட்டியுள்ளோம் என்று கருணாநிதி பெருமையாகக் கூறியிருப்பதுபற்றி...?

ப: இது சரியான புள்ளி விவரமாகத்தான் இருக்கும். கருணாநிதி மூச்சு விட்டாலே, இந்த மூச்சு திட்டமிட்ட சதி வேலை என்று அறிக்கை விடுகிறஜெயலலிதா, இந்த புள்ளி விவரத்துக்கு பதிலே சொல்லவில்லையே!

கே: 1962 -ஆம் ஆண்டு இந்தியா மீது சீனா படையெடுத்த போது, அந்த ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தியவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று மம்தா பானர்ஜிகூறியிருக்கிறாரே?

ப: உண்மையைத்தான் பேசியிருக்கிறார்.

கே: ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பவர்கள், பணக்காரர்களின் சிரிப்பில் எதைக் காண்பார்கள்?

ப;: மோட்சத்தைக் காண்பார்கள்.

கே: நீங்களும் வீரப்பனை, வீரப்பர் என்று மரியாதையாக அழைக்கிறீர்களே? ஏன் இந்த திடீர் மரியாதை?

ப: வீரப்பருக்கு மரியாதை தராவிட்டால் நான் தமிழ் உணர்வு அற்றவன் என்று அரசு கூறிவிடப் போகிதே என்ற பயம்தான் காரணம்.

கே: நம் நாட்டில் அரசியல் பணி செய்வோரின் எண்ணிக்கை ஒரு கோடி தேறுமா?

ப: ஒன்று, இரண்டு தேறலாம் - அவ்வளவுதான். அரசியலில், தங்கள் பணிகளைச் செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை வேண்டுமானால் நீங்கள்சொல்கிற அளவில் இருக்கலாம்.

கே: தமிழ்நாட்டில் தமிழ் சாகவில்லை என்று அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளது பற்றி...?

ப: தமிளை தாய் மொளியாகக் கொண்ட தமிளகர்கள், தமிளளைக் காப்பபாற்ற முன் வந்து,தமிளைக் கொளை செய்பவர்களைக் கண்டித்து தமிளுக்கு தொண்டு ஸெய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் - என்று டி.வி.யில் யாராவது பேசியதைப் பார்ர்திருப்பார். தமிழ் சாகவில்லை- என்ற நம்பிக்கைவந்திருக்கும்.

கே: சென்னையில் நடந்த பத்திரிக்கை தர்மம் பற்றிய கூட்டமொன்றில், ஆனந்த விகடன், கல்கி, துக்ளக், தினமலர், ஹிந்து ஆகிய பத்திரிக்கைகளுக்கு,பூணூ

ப: துக்ளக் உட்பட, அவர்களால் குறிப்பிடப்பட்ட பத்திரிக்கைகள், அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

எவ்வளவு பெரிய பாராட்டை அறிவித்திருக்கிறார்கள்! துக்ளக் மற்றும் ஆனந்த விகடன், கல்கி, தினமலர், ஹிந்து ஆகிய பத்திரிக்கைகளுக்கு பூணூ

பூணூ

நினைக்க வேண்டியதில் ஞாபகம், நினைக்கத் தகாததில் மறதி - ஆகிய இரண்டும் இனி என் விரதம்;

இகழத் தக்கதில் இகழ்ச்சி, போற்றத் தக்கதில் இகழச்சியின்மை -ஆகிய இரண்டும் இனி என் விரதம்;

நல்லவற்றில் கவனம், தீயவற்றில் அலட்சியம் - ஆகிய இரண்டும் இனி என் விரதம்;

அறியத் தக்கதை அறிவது, அறியத் தகாததை அறியாமலிருப்பது - ஆகிய இரண்டும் இனி என் விரதம்;

நல்லவற்றைக் கேட்டல், தீயவற்றைக் கேட்காமலே இருப்பது - ஆகிய இரண்டும் இனி என் விரதம்;

பொய் பேசாமை, உண்மை பேசுவது - ஆகிய இரண்டும் இனி என் விரதம்.

இப்படிப்பட்ட தர்மம்தான் துக்ளக் போன்ற பத்திரிக்கைகளின் தர்மம் - என்று கூறியவர்களுக்கு, நான் சொல்வது இதுதான்: முயற்சிக்கிறேன்.பூணூ

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X