செலஸை வீழ்த்தினார் வீனஸ்
Subscribe to Oneindia Tamil
நியூ ஹேவன் (கனக்டிகட்):
அமெரிக்காவின் நியூ ஹேவன் நகரில் நடந்த மகளிர் டென்னிஸ் சங்க டென்னிஸ் சாம்பியன் போட்டியில், வீனஸ் வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
சனிக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில், வீனஸ் வில்லியம்ஸும், மோனிகா செலஸும் மோதினர். இதில் 6-2, 6-4 என்ற நேரடி செட் கணக்கில்வில்லியம்ஸ் வென்றார்.
இந்த ஆண்டில் வில்லியம்ஸ் பெறும் நான்காவது சாம்பியன் பட்டமாகும் இது. சாம்பியன் பட்டம் வென்ற வில்லியம்ஸுகுக்கு 87,000 டாலர் பரிசுகிடைத்தது.












Click it and Unblock the Notifications