வந்தார் பிரபு தேவா
பெங்களூர்:
கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரின் குடும்பத்தினரை நடிகர் பிரபு தேவா சந்தித்து ஆறுதல் கூறினார்.
ராஜ்குமார் உள்பட 4 பேரை கடந்த ஜூலை 30-ம் தேதி வீரப்பன் கடத்திச் சென்றார். ராஜ்குமாரையும் மற்றவர்களையும் மீட்பதற்கான முயற்சியில்தமிழக, கர்நாடக அரசுகள் ஈடுபட்டுள்ளன.
ராஜ்குமாரை மீட்பதற்காக நக்கீரன் கோபால் அரசுத் தூதராக வீரப்பனை இரு முறை சந்தித்தார். திங்கள்கிழமை இரவு அவர் மீண்டும் காட்டுக்குள்சென்று வீரப்பனைச் சந்திக்க உள்ளார்.
கடத்தப்பட்டுள்ள ராஜ்குமாரும் மற்றவர்களும் விரைவில் விடுதலை ஆகவேண்டும் என்று ராஜ்குமாரின் குடும்பத்தினரும், அவரது ரசிகர்களும்எதிர்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்த் திரைப்பட நடிகர் பிரபுதேவா, ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜ்குமார் வீட்டுக்குச் சென்று ராஜ்குமாரின் மனைவி மற்றும்உறவினர்களைச் சந்தித்தார்.
சுதர்ஸன ஹோமம்:
இதற்கிடையே, பெங்களூரில் உள்ள ராஜ்குமாரின் வீட்டில் திங்கள்கிழமை சுதர்ஸன ஹோமம் நடத்தப்பட்டது. இதில் ராஜ்குமார் மனைவி பார்வதம்மா,மகன் புனீத் குமார் மற்றும் உறவினர்களும், ரசிகர்களும் கலந்து கொண்டனர்.
ராஜ்குமார் கடத்தப்பட்ட பிறகு கர்நாடக மாநிலம் முழுவதிலும் இருந்து அவரது ரசிகர்கள் பெங்களூர் வந்து ராஜ்குமார் வீட்டுக்குச் சென்று அவரதுகுடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications