வேளாங்கண்ணி ஆலய திருவிழா துவக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாகப்பட்டனம் மாவட்டத்திலுள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் புனித அன்னைத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

திருவிழா துவக்கத்தில் அன்னை உருவம் பொறித்த கொடி ஊர்வலமாக எடுத்து வரப்படும். தஞ்சாவூர் பேராயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியைப் புனிதம்செய்து தர அது மாலை 6 மணியளவில் ஏற்றப்படும்.

செப்டம்பர் 8-ம் தேதி வரை பத்து நாட்களுக்கு நடைபெறும் அன்னையின் பெருவிழாவையொட்டி வேளாங்கண்ணி முழுவதும் பக்தர்கள் குவிந்துள்ளனர். பலமாநிலங்களிலிருந்தும், அனைத்து மத பக்தர்கள் வரவுள்ளதால் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டனம் ஆகிய நகரங்களிருந்து வேளாங்கண்ணிக்குச் சிறப்புப் பேருநதுகளும் விடப்பட்டுள்ளன.

பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயம்:

சென்னை பெசன்ட் நகரிலுள்ள அன்னை வேளாங்கன்னி கோவிலிலும் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

சென்னை பெசன்ட நகர் கடற்கரையோரத்தில் அன்னை வேளாங்கண்ணி ஆலயம் உள்ளது. ஆரோக்கிய அன்னையின் பிறப்பு பெருவிழா இந்த ஆலயத்தில் சிறப்பாகவருடம் தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆரோக்கிய அன்னையின் பிறப்பு பெருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இதில் மயிலைமறை மாவட்ட முதன்மை குரு அருட்தந்தை டோனி டிலோட்டா கலந்து கொள்கிறார்.

செப்டம்பர் மாதம் 8-ம் தேதி முடிய விழா நடக்கிறது. இந்த 11 நாட்களிலும் தினசரி குழந்தைகள் தினம், குடும்ப தினம், நோயுற்றோர் தினம்,நற்கருணைப் பெருவிழா, இளைஞர் தினம், தேவ அழைத்தல் என்று வரிசையாக கொண்டாடப்படுகிறது. தினசரி சிறப்பு ஆராதனையும், திருப்பலியும் நடக்கிறது.

7-ம் தேதி ஆரோக்கிய அன்னை தேர் திருவிழா மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. இதில் சென்னை மயிலை மறை மாவட்ட பிஷப் அருள் தாஸ் ஜேம்ஸ்கலந்து கொள்கிறார். தேர் பவணிக்குப் பிறகு கே.ஜே ஜேசுதாஸ் கச்சேரி நடக்கிறது.

8-ம் தேதி ஆரோக்கிய அன்னையின் பிறப்புப் பெருவிழா நடக்கிறது. அன்று அதிகாலை 2 மணிமுதல் தொடர்ந்து திருப்பலிகள் நடைபெறும். திருவிழாவுக்குவரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் குடிதண்ணீர் மற்றும் சுகாதார வசதி செய்யப்படுகிறது.

பெங்களூர் புனித மேரி பேராலயம்:

பெங்களூரிலுள்ள புனித மேரி பேராலயத்திலும் மேரி அன்னைப் பெருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+