மீண்டும் காட்டுக்குப் புறப்பட்டார் கோபால்
சென்னை:
நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பது தொடர்பாக மூன்றாவது முறையாக வீரப்பனைச் சந்திக்கதிங்கள்கிழமை இரவு காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார் நக்கீரன் ஆசிரியர் கோபால்.
வீரப்பனைச் சந்திக்கச் செல்லும் முன் அவனது கோரிக்கைகள் தொடர்பான உறுதியானஆவணங்களுடன் செல்ல கோபால் முடிவு செய்திருந்தார். இந்த நிலையில் 51 தமிழ்த் தடாகைதிகள் உள்பட 121 தமிழர்கள் மீதான வழக்குகளை கர்நாடக அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது. இதையடுத்து அதற்கான உத்தரவின் பேக்ஸ் நகல்களுடன் காடு நோக்கிப்புறப்பட்டார் கோபால்.
கோபாலுடன் ஏற்கனவே காட்டுக்குச் சென்ற நக்கீரன் நிருபர்கள் சிவசுப்ரமணியம், சுப்பு,பாலமுருகன் ஆகியோரும் செல்கின்றனர்.
முன்னதாக இரு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கோபால், இம்முறைஎத்தனை நாட்களானாலும் சரி, ராஜ்குமாருடன்தான் திரும்பி வருவேன் என்றுகூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications